பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

 பார்க்கக்கூடாது. எல்லாருமே உன்னைப்போலப் புரளம் புரளத்தான் சீலை உடுத்துகிறார்களோ?” -

"எல்லாருமே சமீன்தார் மனைவிகள் ஆவார்களா?"

"அப்படியானால் நீ இங்கே நடக்கக்கூடாது "

சமீன்தாரிணி சற்றே உறுத்து அந்த இளம் பெண்ணைப் பார்த்தாள். என்ன பைத்தியக்காரப் பேச்சுப் பேசுகிறாய்? கோயிலுக்கே வரக் கூடாது என்றுகூடச் சொல்வாய் போலிருக்கிறதே! ஆடை அழுக்கானால் துவைத்துக் கொள்ளலாம்; அழுக்கைப் போக்கிவிடலாம். இதை ஒரு பெரிய காரியமாக எண்ணிக்கொண்டு இறைவன் கோயிலை வலம் செய்யாமல் இருப்பதா?" என்றாள்.

"அதெல்லாம் சரிதான்; நாம் நம் ஊருக்குப் போகு மட்டும் இந்த அழுக்காடையைக் கட்டிக்கொண்டு தானே இருக்க வேண்டும்? மாற்றுடை ஒன்றும் கொண்டு வரவில்லையே! சற்றே நம்முடைய உயர்ந்த நிலையை நினைத்து, சீலையில் அழுக்குப்படாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கலாமே!”

"இந்த எண்ணம் எனக்குத் தோன்றவே இல்லை. எங்கேயாவது இப்படி நடந்திருந்தால்தானே பழக்கம் இருக்கும்? அப்படி நடந்தாலும் கையால் சீலையைக் கால் தெரியும்படி பற்றிக்கொண்டு நடக்க மனம் துணியாது."

"சரி சரி, நீ சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிருய், ஆடையைத் தழையத் தழைய உடுத்துக் கொள்ளவும் வேண்டும், அழுக்கும் படக்கூடாதென்றால் ஒரு காரியம் செய்தால் நல்லது. இந்த ஒரு சீலைக்காக அப்படியார் செய்வார்கள்?"

சமீன்தாரிணி தன் நாத்தியைப் பார்த்தாள். அவன் கண்ணில் கேள்விக் குறி படர்ந்தது.