பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

"ஆம்; அப்படிச் செய்தால் உன் விருப்பப்படி நடக்கலாம்" என்று சற்றே பரிகாசம் தொனிக்கும்படி சொல்லிச் சிரித்தாள் இளம் பெண். அவள் ஏதோ பரிகாசமாகப் பேசுகிறாள் என்பதை உணர்ந்து கொண்டாள் சமீன்தாரிணி.

"நீ என்னவோ குறும்பாகப் பேசுகிறாய். என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுகிறாய்?"

"ஓர் அரசன் வெயிலில் வெளியே புறப்பட்டான். வெயில் கடுமையாக இருந்தது. அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. இந்த வானம் முழுதும் மறையும்படி பந்தல் போடச் சொல் என்று உத்தாவிட்டானாம். அப்படி நீ ஓர் உத்தரவிட்டால் உன் சங்கடம் தீரும்."

"உன் உவமை இருக்கட்டும். அந்த அரசனைப் போல முட்டாள்தனமான செயல் ஒன்று நான் செய்ய வேண்டும் என்கிறாய். அது இன்னதென்று சொல் பார்க்கலாம். உன்னுடைய கற்பனை வளத்தை நானும் அறிந்து மகிழ்ச்சி பெறுகிறேன்."

"உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது? நீ நடக்கிற இடமெல்லாம் அழுக்கும் மண்ணும் இராமல் இருக்கவேண்டும் என்று அண்ணனிடம் சொல்லி ஓர் உத்தரவு போட்டுவிடு. அப்போது உன் ஆடை அழுக்காகாமல் இருக்கும். அதாவது, நீ மண்ணிலேயே நட்க்கக் கூடாது. நீ போகும் இடம் முழுவதும் கல்லினால் 'தளம் போட்டுவிட வேண்டும். அப்படியானால் உன் நாகரிகம் கலையாது. ஆடை புரண்டு புரண்டு பள பளக்கும்.

இன்னும் அந்தப் பெண் குறும்புப் பேச்சை விடவில்லை. ஆனால் இப்போது அவளுடைய அண்ணி, ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள். அவள் முகத்தில் இப்போது கோபக் குறிப்பு இல்லை. எதையோ மிகவும் ஆழ்ந்து சிந்திக்கிறாள் என்று தோன்றியது. முகத்தில்