பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92



ஒரு சமயம் தொண்டை நாட்டுப் புலவர் ஒருவர் வேற்று நாட்டுக்குப் போயிருந்தார். அங்கே ஒரு புலவரைச் சந்தித்தார். புலவர்களைப் பற்றியும் புரவலர்களைப் பற்றியும் தங்கள் தங்கள் அநுபவத்தில் உணர்ந்தவற்றைப் பேசிக்கொண்டிருந்தார்கள். அயல் நாட்டுப் புலவர் தாம் கண்ட ஈகையாளர்களின் பெருமையையும், அவர்கள் ஈகைப் பான்மையை நன்கு எடுத்துக்காட்டும் சில நிகழ்ச்சிகளையும் எடுத்துச் சொன்னார். தொண்டை நாட்டுப் புலவரும் தாம் அறிந்த கொடையாளரைப் பற்றிப் பேசினார். இடையே வல்லாளருடைய இயல்பையும் சொன்னார். "அவரைக் காட்டிலும் மிகுதியான செல்வம் படைத்தவர்கள் பலர் உலகில் இருக்கலாம். தம்பால் வரும் புலவர்களுக்கு விலை உயர்ந்த பொருள்களைக் கொடுத்துப் புகழ் பெறுபவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், வல்லாளருடைய இயல்பு தனிச் சிறப்புடையது. அவர் எங்கே இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், யாரேனும் வந்து இரந்தால், கையில் அப்போதைக்கு எது இருந்தாலும் உடனே கொடுத்துவிடுவார். எங்கேனும் வெயிலில் குடை பிடித்துக்கொண்டு போவார். இடையே புலவனே வறியவனே வந்து கையை நீட்டினால், அந்தக் குடையை அவன் கையில் கொடுத்து விட்டுப் போய்விடுவார்."

"வீட்டுக்கு வாருங்கள், தருகிறேன் என்று சொல்ல மாட்டாரா?"

"அதுவும் சொல்லுவார். ஆனால், கண்ட உடனே இருப்பதைக் கொடுப்பதில் அவருக்குத் திருப்தி அதிகம். வீட்டிற்குப் போவதற்குள் மனம் மாறினால் என் செய்வது என்று எண்ணுவார் போலும்! எத்தனையோ சமயங்களில் நடுவழியில் கண்ட புலவனுக்குக் காதுக்-