பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

கடுக்கனைக் கழற்றிக் கொடுத்திருக்கிறார், இடுப்பு அரைஞாணை. எடுத்து வழங்கியிருக்கிறர்.”

"அப்படியானால் அந்த வள்ளலை அவசியம் பார்த்து அளவளாவ வேண்டும். நீங்கள் என்னை அவரிடம் அழைத்துச் செல்வீர்களா?”

"அதற்கு அவசியமே இல்லை. உங்களிடம் தமிழ் இருக்கிறது. அதுவே உங்களை அழைத்துச் செல்லுமே! நான் வந்து உங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில்லையே! அவருடைய இயல்பை உள்ளபடி உணரவேண்டுமானல், நீங்கள் தனியாகச் சென்று அவரைக் காண்பதுதான் நல்லது. நான் அவருக்குத் தெரிந்தவனாகையால், எனக்காக உங்களை வரவேற்றுப் பரிசளித்தார் என்று நீங்கள் ஒருகால் கருதவும் கூடும். அந்தக் கருத்துக்கு இடம் இல்லாமல் நீங்கள் தனியே சென்று பாருங்கள். வீட்டில் இருக்கும்போதுதான் பார்க்க வேண்டும் என்பதில்லை. எங்கேயாவது வழி மறித்துச் சோதனை போடுங்கள்.”

"நான் என்ன வழிப்பறிக்காரனா?"

"இல்லை, இல்லை; எங்கேனும் சென்று கொண்டிருக்கும்போது அவரைச் சந்தித்துப் பாருங்கள் என்று சொல்லவந்தேன். அப்போது நாள் கூறியவை எவ்வளவு உண்மை என்று தெரியவரும்" என்றார் தொண்டை நாட்டுப் புலவர்.

அயல் நாட்டுப் புலவர் வல்லாளரைச் சென்று காண்பதென்று தீர்மானித்துக்கொண்டார். அவர் இருக்கும் ஊருக்குச் செல்லும் வழியைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

ஒரு நாள் புலவர் தொண்டை நாட்டுக்குப் புறப்பட்டார். அந்த நாட்டுப் புலவர் சொன்னவையெல்லாம். அவரது நினைவுக்கு வந்தன. வல்லாளரை மிகவும். சங்கடமான நிலையில் வைத்துச் சோதனை செய்து

இ. கதை-7