பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10

கொடுமையைக் காய்ந்தார்! மடமையைச் சாடினார்! மணிமொழியை வீசினார்! ஏழ்மைகண்டு பயந்தாரில்லை! ஏளனம் கண்டு சலித்திடவில்லை! எதிர்ப்புக்கு அஞ்சவில்லை .


வால்ட் விட்மன் ஒரு வம்பன் என்றனர். வாதாடவில்லை! அவன் ஓர் அபாயக்குறி என்றனர்! 'ஆம்' என்றான். அவனை வெறுத்தனர், கண்டித்தனர்; ஆனால் அவனைத் தங்கள் உள்ளங்களிலிருந்து மட்டும் பெயர்த்தெடுத்துவிட முடியவில்லை. அவனுடைய கவிதைகள் உள்ளத்திலே ஊடுருவிச் சென்றுவிட்டன. தம்மையுமறியாமல் அவன் வயத்தராயினர்.


அமெரிக்கா, அங்கு தோன்றிய பாரதிதாசனைப் போற்றலாயிற்று, அவனுடைய 120-ம் ஆண்டு விழாவை ஆனந்தமாகக் கொண்டாடிற்று. நியூயார்க்கில் வால்ட் விட்மனுக்கு சிலை அமைத்தனர்!


நாம், நமது பாரதிதாசனுக்குச் செய்தது என்ன? ஏதும் செய்ய வகையற்றவரா நாம்? என்னை நான் இக்கேள்வி கேட்டுக்கொள்ளுகிறேன். ஒரு கணம் எண்ணிப் பாருங்கள், பாரதிதாசன் அங்குப் பிறந்திருந்தால்?


காளி அருளோ, பவானியின் கடாட்சமோ கடம்பனின் கடைக்கண் நோக்கோ பெற்றவர்களே கவிகளாக முடியும்; அங்ஙனம் கவிகளானதும் அவர்கள் காவலரின் கொலுமண்டபங்களிலே இருப்பர்: அரசர் அகமகிழ அந்திவானத்தைப் பற்றியும் அலர்ந்த ரோஜா பற்றியும் ஆடலழகியினுடைய அதரத்தின் துடிப்புப் பற்றியும் பாடுவர்; அங்ஙனம் பாடுதல் சிற்றின்பமாமே என்று அஞ்சி, அதனை அரியின் அருள், அல்லது அரசனின் திறம் என்னும் மேற்பூச்சுத் தயா