பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

குருமார்கள், ஆச்சார்ய பரம்பரையினர். தனிப்பட்டவர்கள் ஆகியவர்களால் கல்விகற்பிக்கப்பட்டு வந்ததேயல்லாமல், எந்த அரசியலும் நேரே தொடர்பு படுத்தி கைக்கொள்ளவில்லை. மத குருமார்கள் கையிலிருந்த கல்வியைப் பிடுங்கி அரசியலார் நடத்தினால் தான் கல்வி எல்லோருக்கும் பரவ வாய்ப்பு ஏற்படும் என்றுகருதிய மூயில்பெரி, கருதியதைச் செய்து முடித்தார். கல்வி புகட்டும் முறையிலே போற்றிப் புகழ அவருடைய படத்தைப் பிரஞ்சுப் பள்ளிகளிலெல்லாம் விளங்கும் படி செய்வது வழக்கம். உலகிற்கே வழிகாட்டியாகத் தோன்றிய அந்தத் தலைவராம் மூயில் பெரியின் நூற்றாண்டு நினைவுவிழா எங்கணும் கொண்டாடப்பட்ட பொழுது, பாண்டிச்சேரியிலும் கொண்டாடப்பட்டது. அவ்விழாவை சிறப்புச் செய்ய எண்ணிச் செய்த பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக வாழ்த்துப்பாக்கள் பல மொழியிலும் இயற்றச்செய்வது என்ற திட்டத்தையும் போட்டார்கள். அதன்படி தமிழில் வாழ்த்துப்பா புனைய நமது கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார். கவிஞரும் அதற்கிணங்கினார். குள்ள நரிக் கூட்டத்தினர் சிலர் பாரதிதாசன் ஒரு சுயமரியாதைக்காரன், அவன் பாடுதல் ஏற்புடைத் தாகாது என்னும் கருத்துப்படச் செயற்குழுத்தலைவரிடம் புறஞ்சொல்லியும் பயனற்றுப்போகவே பாரதிதாசனே தமிழில் பா இயற்ற வேண்டி ஏற்பட்டது. விழாவில், அழகு செய்யப்பட்ட மண்டபத்தில், கவர்னரும், அவரது ஆட்சி சுற்றமும், நீதிமன்றத் தலைவர்களும், குருமார்களும், பாதிரிமார்களும், பிரெஞ்சு நாட்டு திராவிட நாட்டு மக்களில் பணக்காரர்களும், பட்டம் பதவி வகிப்போரும், பாமரரும்