பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22


தலைவர் மீண்டும் வாட்டமுற்றாரேனும் மேலும் அறிய ‘கோந்தினியே’ என்றார். “வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை, வரவிடவில்லை மதக்குருக்களின் மேடை, நறுக்கத்தொலைந்தது அந்தப்பீடை, நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை!” என்று நான்காவது அடியையும் சேர்த்து இசைத்தார் கவிஞர், மொழிபெயர்ப்பினைக் கேட்டார் தலைவர். சுருங்கிய முகம் மலரத் தள்ளி எழுந்து சிலசொன்னார். அது தான் அது தான் இந்தப் புலவன் சொல்லியது தான், குருமார்களிடத்தே முடங்கிக்கிடந்த கல்வியை நாடெல்லாம் நீர் போல பரப்பினான் மூயில் பெரி. அதைத்தான் இந்தப்புலவன் சொல்கிறான். இவன் தான் புலவன் மற்றையோரெல்லாம் புலவராகமாட்டீர்! என்பது மகிழ்ச்சியினால் எழுச்சியுற்று அத்தலைவர் கூறிய கூற்று, அன்று முதல் அந்தத் தலைவரின் மதிப்பிற்குரிய கவியாகவும், உற்ற நண்பராகவும் கவிஞர் விளங்கினார். பாதிரிமாரின் சீற்றமும், பாராள்வோரின் கொடுமையும் சூழக்கூடும் என்ற நிலையிலும் கவிஞர் கொண்டிருந்த துணிச்சல் வேறு எந்தக் கவிஞருக்கும் இந்த நாளிலும் வந்ததாகக் கண்டறியோம். கவிஞர் தாம் பார்த்து வந்த வேலையினின்றும் ஓய்வு பெற்று வெளியேறி விட்டார் என்பதைக் கேட்டு திராவிடம் மகிழ்ச்சிக் கொண்டு வருக என்று வாயார வாழ்த்தி மனமார வரவேற்கின்றது.

புரட்சிப் புன்னகையில் மலர்ந்து பொலிவுபெற்று வரும் உலகம், புரட்சி வீரர்களை காலந்தோறும் கண்டு வருகிறது காட்சிப் பொருளும் கருத்துப் பொருளும் தாம் நின்றதொரு நிலையிலிருந்து தேவைக்கேற்றவண்ணம் நல்ல முறையில் சிறந்த நிலைக்கு மாறும் தன்மை