பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

யைப் புரட்சி என்கிறோம். ஒவ்வொரு துறையிலும் படிப்படியாக ஏற்பட்ட புரட்சியின் விளைவால் தான் இயற்கை உலகில் செயற்கைக் காட்சிகள் கவின்பெற இலங்கக் காண்கிறோம், பொதுவாக உலகம், பொருள்களிடத்தே ஏற்படும் புரட்சியினால் உருக்கொள்ளுகின்றது; பொருள்கள் மக்கள் செயலாற்றலில் ஏற்படும் புரட்சியினால் உருமாறுகின்றன; செயலாற்றல் மக்கள் சிந்தனையில் ஏற்படும் புரட்சியினால் உருவடைகின்றது என்பதை நன்கு அறிகிறோம். எனவே மக்களின் சிந்தனையைப் பொறுத்துத்தான் செயப்படு உலகம் ஒவ்வொரு துறையிலும் உருக்கொள்ளுகின்றது என்பது பெறப்படுகின்றது. அப்படிப்பட்ட அடிப்படைக் காரணமாக அமைந்த மக்களின் சிந்தனையில் புரட்சியைச்செய்யும் வீரனைத்தான் உலகம் மிகமிகப்போற்றி புகழ்ந்து வந்திருக்கிறது. சிந்தனையைக்கிளரும் எழுதுகோலைத் தாங்கிய வீரனைப் போற்றிய அளவுக்கு உலகம் இதுவரையில் வேறு யாரையும் போற்றிய தில்லை. “வாளினும் வலிது எழுதுகோல்” என்பது ஆங்கிலநாட்டுப் பழமொழி. “வில்லே ருழவர் பகை கொளினும், கொள்ளற்க சொல்லே ருழவர் பகை” என்பது வள்ளுவன் வாய்மொழி. சிந்தனையைச் சீர் படுத்தும் சிந்தனைச்சிற்பிகளிலே தலை சிறந்து விளங்கும் வீரன் கவிஞனாவான். அவனைத்தான் புரட்சிக்கவிஞன் என்று உலகம் போற்றும். வெறும் கவிதைகளைப் பாடுபவன் கவிஞனாகலாமேயொழிய அவன் புரட்சிக் கவிஞனாகமாட்டான. இருக்கின்ற நிலையிலிருந்து உயர்ந்த சிறந்த அழகிய அறிவுடைமையோடு கூடிய நிலைக்கு மக்களுள்ளத்தை இழுத்துச் செல்லுகின்றவனே புரட்சிக் கவிஞனாகக் கருதப்படுகிறான். முதல்