பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24



சிந்தனைச் சிற்பியின் உள்ளத்தே எழுந்த ஏன்? என்ற கேள்வியின் ஏதிரொலி உள்ளங்கள் தோறும், இடத்துக்கு இடம், நாட்டிற்கு நாடு, காலத்திற்கு காலம் மாறி மாறி அடுத்தடுத்து ஒலிக்கவே உலகம் வளர்ச்சியடையத் தொடங்கிற்று. உலக இயல்பை அப்படியே படம் பிடித்து உள்ளத்தே இருத்தி, ஏன் என்று கேட்டு, அதற்கு மெருகிட்டு, வேண்டும் அளவுக்குத் திருத்தி, அவ்வண்ணமாக உலகைக்காண விழைகிறான் புரட்சிக் கவிஞன், தமிழகத்தில் தோன்றி வாழ்ந்து மறைந்த கவிஞர் எண்ணிறந்தோர் என்றாலும் அவரெல்லாரிடத்தும் அமையப்பெறாத புரட்சிக் கவிஞனுக்குள்ள புலமை பாரதிதாசன் ஒருவரிடத்தே அமையப்பெற்றபடியால் அவரைப் புரட்சிக் கவிஞர் என்று போற்றுகிறோம். பாரதிதாசனைப் புரட்சிக் கவிஞராக ஆக்கியது அவரது சூழ்நிலையேயாகும். ரஷ்யா ஒரு புஷ்கினையும், ஆங்கிலநாடு ஒரு ஷெல்லி யையும், பிரான்ஸ் ஒரு ஹூகோவையும், அமெரிக்கா ஒரு வால்ட் விட்மனையும் கண்டவாறு திராவிடமும் ஒரு பாரதிதாசனைக் கண்டது. கவிஞனுள்ளத்தோடு தோன்றிய கனக சுப்புரத் தினம் பாரதிதாசனாகி, தீந்தமிழ்த் தேன் மாந்தித் தம் தாய்நாட்டின் பெருமைதன்னை, நல்ல மனிநதியை, உயர்குன்றை, தேனை அள்ளிப் பெய்யும் நறுஞ்சோலையினை, வீசு தென்றலைப் பாடினார்; பாடி மக்களுள்ளத்தை அவற்றிலே படியவைத்தார். நாட்டின் மண் வளத்தைக் காணத் தம் கண்களைத் திருப்பினார். நாடிழந்து நலமெலாமிழந்து அரசிழந்து அழகெலாமிழந்திருக்கும் தம்மக்களின் தாழ்நிலையைக் கண்டார். வாளோச்சி வாழ்ந்த தமிழ் மறவர் வீணரின் தாளடி