பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

யில் வீழ்ந்து கிடந்ததைப் பார்த்தார். உள்ளம் குமு றிற்று. குமுறிய உள்ளம்,

“நாயினுங் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்
ஓயுதல் இன்றி அவர்கலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்”

என்ற உறுதிமொழி கூறி எழுந்தார்; எழுந்து,

“தமிழரின் மேன்மையை இகழ்ந்த வனைஎன்
தாய் தடுத் தாலும் விடேன்
எமைநத்து வாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்”

என்று வஞ்சினங் கூறிப் பாசறை புகுந்த கவிஞர் பகுத்தறிவு வாளேந்திப் பகைப்புலங்கள் பலவற்றையும் அளிக்கத் தொடங்கினார். அழிக்கத் தொடங்கவே புதுமைக் கவிஞர் புரட்சிக் கவிஞரானார். வேங்கைகள் உலவிய தம் தாய்நாட்டில் நரிகள் உலவக் கண்டார். வாளேந்தி வாழ்ந்த மக்கள் வகையற்றோரின் தாளேந்தி நின்றனர். அறிவும் திறனும் செறிந்திருந்த நாட்டில் மடமையும் மருளும் சூழ்ந்தன. கைவீரித்துவந்த கயவர், மக்களிடத்துப்பொய்விரித்து அவரின் உரிமையெலாம் பறித்து வாழலானார். ஏற்றம் மிகுந்திருந்த நாட்டில் இழிகழுதை ஆட்சி வளர்ந்தது. இவற்றையெல்லாம் கண்ட புரட்சிக் கவிஞர் பாரதி தாசன், உறங்கிக்கிடக்கும் தமிழர்களின் உள்ளத்தே சொல்லம்புகள் ஊடுருவிப் பாயச்செய்தார்.‘சிம்புட் பறவையே சிறகை விரி, எழு, சிங்க இளைஞனே திருப்பு முகம், திறவிழி’ என்றார். ‘உங்கள் குகையினை வீட்டே