பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26



வெளிவருவீர் சிங்கங்காள்!’ என்று கூறி இளைஞர் கூட்டத்தை வரவேற்க எதிர்நோக்கி நிற்கிறார். காலத்திற்கேற்ற கருத்துக்களைக் கவிதையின் மூலம் குழைத்தூட்டியே மக்களை மக்களாக ஆக்கினார்கள் மற்றை நாட்டுப் புரட்சிக் கவிஞர்கள். அரசனையும் ஆண்டவனையும் மட்டும் பாடும் பணியில் கவிஞர்கள் ஈடுபட்டிருந்த காலம் ஒன்று இருந்தது. மதுவோடும் மங்கையோடும் கொஞ்சும் மன்னன், கயமை பொருந்திய திருவிளையாடல்களைச் செய்த ஆண்டவன் இவர்கள் கவிஞனின் பாட்டுடைத் தலைவர்களாக விளங்கினார்கள். அந்தக் காலங்களில் தான் மக்களின் ஆயுள் அரசனுக்கும், அறிவு ஆண்டவனுக்கும் அடிமைப்படுத்தப்பட்டன. அவைகளில் மக்கள் உள்ளம் ஊறத்தொடங்கிய பிறகுதான் அறிவு வளர்ச்சிக்கான வழிகளில் தடைகள் ஏற்பட்டன. ஆகவேதான்.

இருட்டறையில் உள்ளதடா வுலகம்
சாதியிருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே
மருட்டுகின்ற மதத்தலைவரும் வாழ்கின் றாரே
வாயடியும் கையடியும் மறைவ தெந்நாள்
சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்த வற்றைச்
சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே இல்லை யாயின்
விடுதலையும் கெடுதலையும் ஒன்றேயாகும்

என்று அறிவுரை பகன்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அறிவும் திறனும், அழகும் எழிலும், மலையும் மடுவும், சோலையும் சாலையும், வளமும் வகையும், மக்களின் பண்பும் பழக்க வழக்கமும், கொள்கையும் கோட்பாடும் பாடல்களின் பொருள்களாக மிளிர்ந்து