பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


கருத்திற் கின்பம் பயக்கும் ஓர் தனிக் கருத்தை உள்ளடக்கிக் கிடப்பதும் கண்டுணர்ந்து இன்புறற்பாலதாம். உவமையிலும் ஓர் புதுமை, உறுதிக்கருத்தை உணரவைப்பதற்காக:

இவ்வுறுதிகள் கொண்ட தமிழகத்தின் தலைசிறந்த அறிஞரை, தமிழகத்தின் விடுவிப்பாளரை, அடிமை யொழிப்பாளரை, பொதுவுடமைப் போர் வீரரை, புத்துலகச் சிற்பியை, எதிர்காலத் தலைவரை, உணர்ச்சியின் உருவத்தை, புரட்சிக்கவி எனக் கூறல் மிகையாகாது.

உறுதிக் கருத்துக்களை உலகத்துக்களித்த ஒப்பற்ற கவிஞரே உலகத்தின் எதிர்காலத்தை அமைப்போராவர். ஆயின், நமது புரட்சிக்கவி, எதிர்காலத்தை நோக்கி, உலகினை ஒரு பெரு நெறியில் அமைத்துத் தருபவர் என்பதும், மக்கள் உய்ய அவ்வழியன்றிப் பிறிதொன்றில்லை யென்பதும் உறுதியாமன்றோ!

உறுதிக்கவி, வெற்றி கொள்வதுறுதி!

எங்கும் எதற்கும் எவரும் புரட்சி செய்யுங் காலம் இது. புரட்சி நடவாத காலமோ, தோன்றாத நாடோ இல்லை, புரட்சி முதலில் எண்ணத்தில் தோன்றி, அதன் பின்னரே செயலில் நிகழும் வேறு எந்த நிகழ்ச்சியையும் போல. அப் புரட்சி, உள்ளத்திலே அரும்பி,சொற்களிலே மலர்ந்து, ஏடுகளிலே கமழ்ந்து, மக்களுடைய மனத்திலே நிறைந்து, அவர்தம் செயலிலே காய்த்து, இறுதியிலே நாட்டிலே அந் நாட்டு மக்கள் வாழ்க்கையிலே கனிகின்றது.

எண்ணத்தில் ஏற்படும் மலர்ச்சி, ஏட்டிலே இடம் பெற்றபின் தான் நாட்டிலே புரட்சிக்கான அடிப்படை