பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

                          32

கள் வலுப் பெறுகின்றன. உலகின் வரலாற்றிலே, ஏட்டிலே புரட்சியைத் தோற்றுவித்தோர் சிலர்: நாட்டிலே அதனை உண்மையாக்கினோரும் சிலர். இந்தியத் துணைக் கண்டத்திலோ, அன்றித் திராவிடத் திரு நாட்டிலோ என்றால், எண்ணவும் ஆள் கிடைத்திடுதல் அருமையாம். திராவிடத்தில் புரட்சிக் கருத்தை அழகான கவிதைகளாக, காவியச் சித்திரங்களாக ஏட்டிலே திகழ வைத்தவர், தனிப் பெருங் கவிஞர், பெருந்தகை பாரதிதாசன் ஆவார். கவிஞர், கருத்துலகை மலரச்செய்யுந்தலையாயகடனை, முதற்பணியை முட்டின்றி நிறைவேற்றியுள்ளார் முதற்கண் நிகழ்வது நிகழ்ந்தால் அதன் வழிப் புத்துலகம் பூக்க வேண்டுமன்றோ !

இந்நாட்டிலே புரட்சியுள்ளம் ஒடுங்கி, புதுமைக் கருத்துக்கள் மங்கி, பகுத்தறிவும் பண்பும் நசித்துப் பலப்பல நூற்றாண்டுகள் கழிந்து விட்டன. மக்களெல்லாம் நடைப்பிணங்களாக உலவுகின்றனர்; மானமிழந்து மதிகெட்டுத் திரிகின்றனர்; தன்னுணர்வற்று, தம் தாய்நாட்டை மறந்து, உரிமையிழந்து நிற்கின்றனர்; மறம் குன்றியதால், “வீரம்” வரலாற்றுச்செய்தியாகவும், 'போர்க்களம்' படக்காட்சியாகவும், 'வெற்றி'வேற்று நாட்டார் உரிமையாகவும் மாறிவிட்டன. பூரிக்குந் தோள்களோ, போர்ச்செய்தி கேட்டுக் களிப்பூறும் உள்ளமோ, வாளினது பளபளப்பைக் கண்டு ஒளிபெறும் கண்களோ, தோளொடு தோளிணைத்து நிற்கும் படை மாட்சியை எண்ணியும், தனியாற்றலைக் கருதியும் "பகைப்புலம் மாய்த்திடுவோம்" என்ற எக்காளமோ, இன்று காணாத கேளாத காட்சிகளாகிவிட்டன. தமிழகத்தின் பண்டைப் பெருமைகள்