பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

34


        “சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா?
        சமயபேதம் வளர்த்தே தளர்வது நன்றா? 
        

என்று கேட்பது கவிஞர் தானே? என்றால்,ஆம். சாந்தியால் உலகம் தழைப்பது நன்று. எனவே அச் சாந்திக்கு மாறான வேறுபாடுகளை விளைக்கும் சமயங் களும், சச்சரவுகளும் ஒழிக்கப்படவேண்டும். அதை ஒழிக்கப் புரட்சி தேவை, அப் புரட்சி, போர்க்களம் புகுந்தேனும் நடந்தே தீர வேண்டும் என்பது கவிஞர் கருத்து.

    அணிபெறத் தமிழர் கூட்டம்  

போர்த்தொழில் பயில்வதெண்ணிப்

    புவியெலாம் நடுங்கிற்றென்ற 

வார்த்தையைக் கேட்டுநெஞ்சு

    மகிழ்ந்து கூத்தாடல் என்றோ? 

மண்ணிடை வாளையேந்திப்

    பகைப்புலம் மாய்ப்பதற்கும் 

எண்ணிலாத் தமிழர் உள்ளார்

    எனும்நிலை காண்பதென்றோ? 
 
    என்று கவிஞர், தம் நாட்டார் போர்த்தொழில்
பயின்ற வீரர்களாக விளங்கவேண்டுமென விழைந்து
கூறுகின்றார். அந்நிலை ஏற்பட்டுவிட்டால்,
    
       “ எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
        மங்காத தமிழென்று சங்கே முழங்கு!" 
என முழங்கி,
       “வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
        தோளெங்கள் வெற்றித் தோள்கள் “

என்று தோள் தட்டி,