பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

35


    “சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள் 
    தீராதிதீரரென் றூதூது சங்கே!
    பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
    சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு!" 
    

எனச் சங்கநாதம் முழங்கிடுவர் தமிழர் எனக் கருது கிறார் கவிஞர், அம் முழக்கத்திற்குப்பின்,

     "கிளம்பிற்றுக் காண் தமிழர் சிங்கக்கூட்டம் 
     கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக்கூட்டத்தை  
     வளம்பெரியத் தமிழ் நாட்டில் தமிழரல்லார்
     வால்நீட்டினால் உதைதான் கிடைத்திடுங் காண்" 
     

என்று தமிழருடைய எழுச்சி இருக்கும் விதத்தை இங்கே சித்தரிக்கின்றார். தகுமுறை நீங்கி நடக்கும் மாற்றாருக்குத்தமிழர் கற்பிக்கவேண்டியதை எடுத்துக் கூறியுள்ளார். -

அந்தப் “புரட்சி உள்ளம்" தொழிலாளரைப்பற் றிப் பேசும்போது, இதைவிடப் பன்மடங்காகக் கனல் கக்குகின்றதைக் காணலாம்:

       “நடவுசெய்த தோழர்கூலி
           நாலணாவை ஏற்பதும் 
       உடலுழைப்பி லாதசெல்வர்
          உலகைஆண்  டுலாவலும் 
       கடவுளாணை என்றுரைத்த
          கயவர் கூட்டமீதிலே
       கடவுள் என்ற கட்டறுத்துத்
      தொழிலுளாரை ஏவுவோம்" 
      

இங்கே, தொழிலாளரை அவர்களது மூட நம்பிக் கையைக்கொண்டே ஏமாற்றப் பயன்படும் கற்பனைக்