பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

37


இனி, ஏழைகளைப்பற்றியும் உலக மக்களுக்கு உணர்த்தக் கருதி, உலகப்பனை விளித்துச் சொல்கிறார்:

ஓடப்பரா யிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால், ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ

என்று. இதைக் கேட்டுவிட்டால், ஏழை மட்டுமின்றிக் கோழையாய்த் திரிபவனும் புரட்சிக்குத் தயாராகி விடுவான். அப்படி அனைவருமே புரட்சிக்குத் தயாராகும் நிலை பிறந்துவிடிலோ, அப்பொழுதும் போர்க்களத்தில் நின்று முரசொலி முழக்குகின்றார் புரட்சிக் கவிஞர். போர் வீரர்களுக்கு அவர் தரும் புத்துணர்வு இழந்த உறுப்புக்களை மட்டுமல்ல, நீங்கிய உயிரையே திரும்பத் தந்து, புதுவாழ்வளித்து, போர்க்களத்தில் வெற்றி வாகை சூடச்செய்யும் தன்மைத்து. கேளுங்கள் அம் முழக்கத்தை

"வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா? கொலைவாளினை எடடாமிகு கொடியோர் செயலறவே குகைவாழ் ஒரு புலியே உயர்குண மேவிய தமிழா!
இலையே உணவிலேயே கதி இலையே எனும் எளிமை
இனிமேலிலை எனவே முரசறைவாய் முரசறைவாய்"

'கொலை வாளினை எடடா' என்றவுடனேயே கொலை வாள் என்று கூறுவதிலே உள்ள உணர்ச்சி தெளிவாகின்றது. வாள் - கொலை செய்வதற்குரிய வாள் என்பது மட்டுமின்றி, இதுநாள்வரை கொலைத் தொழிலில் ஈடுபடாது உறையிற்கிடந்த வாள் என்பதும், இனி உறையினின்று உருவிவிட்டால், கொலை மாபாதகமா-