பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

38

னாலும், உரிமையை உண்மையாக்க, நீதியை நிலை நாட்ட, உலுத்தரின் உயிரைக் குடித்தே தீரும் என்பதும் "கொலை வாளினை எடடா" என்பதிலே கேட்கப்படுகின்றது. உணவில்லை கதியில்லை என்று கதறும் மக்களைக் காப்பாற்ற, வீணரை வீழ்த்த கொலை வாளினை எடடா" என்று முழங்குகிறார் கவிஞர்.

ஆணுக்குப் பெண்ணும், பார்ப்பனருக்குச் சூத்திரரும், பணக்காரருக்கு ஏழைகளும், மிராசுதாரனுக்கு உழவனும், முதலாளிக்குத் தொழிலாளியும், உயர்சாதியினருக்குப் பறையரும், ஆள்பவருக்கு ஆளப்படுபவரும், உலுத்தருக்கு உழைப்பாளரும், எத்தருக்கு ஏமாளிகளும், எவரும் எங்கும். எக்காரணத்தாலும், எவ்வகையாலும் அடிமையாக இருக்கக்கூடாது. இருப்பது முறையாகாது என்று முழங்குகின்றார் கவிஞர் பாரதிதாசன் தமது கவிதை முழுதம்; இந்நாட்டு மக்கள் இக்காலத்தும் பலப்பல வகையிலும் அடிமைப்பட்டிருப்பதைக் கண்டு காணப் பொறாது தமது கருத்துக் கண்களினின்று கனல் கக்கியுள்ளார்; அந்தத் தீப்பொறிகளே அவரது கவிதைகள்,

"இது எனது" என்னும் கொடுமையைத் தவிர்ப்போம், "ஒரு பொருள் தனி" என்னும் மனிதரைச் சிரிப்போம், "கூழுக்கு ஒருவன் அழும்படி ஆண்டிடும் கோலை முறித்திடுவோம்", "ஏழை முதலாளி இல்லாமற் செய்திடுவோம்", "சாதிமத பேதங்கள் மூடவழக்கங்கள், தாங்கி நடைபெற்று வரும் சண்டையுலகிதனை ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம், பின்னர் ஒழித்திடுவோம், புதியதோர் உலகம் செய்வோம் "பொதுவுடமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்-