பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்


________________

அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன் அமெரிக்கநாட்டிலே, ஒரு பாரதிதாசன் புதுக்கவி என்றும் புரட்சிக்கவி என்றும் கொண்டாடப்படுபவர். ஆனால், தமிழரில், தன்மானக் கோட்பாடுடையவர் புரட்சிக்கவி பாரதிதாசனைத்துவக்கத்திலேயே பாராட் டினர். அமெரிக்கநாட்டுப் பாரதிதாசனுக்கு, ஆரம்ப காலத்திலே அஃதும் இல்லை. இன்றும் நமது கவிஞரை இங்குள்ள ஏடுதாங்கிகள், ஏதேனும் கூறிடுவர் இறு மாப்புடன். அன்று, அமெரிக்கநாட்டுக் கவிஞனையும் அவ்விதமே ஏளனம் செய்தனர். பின்னரோ புகழுரை யைப் பொழிந்தனர்! புரட்சிக்கவிஞர், வால்ட் விட்மன் என்பாரையே நாம், அமெரிக்க நாட்டுப் பாரதிதாசன் என்கிறோம். அவர், கவிதை எப்படி இருத்தல் வேண்டும். என்பது பற்றித் தமது கருத்தைப் பலசமயங்களிலே கூறியிருக் கிறார். ஒரு கவி, கவிதையின் இலட்சணத்தை விளக்கு வது, அவரை நாம் அறியவும், அவர் மூலம் பொது வாகவே கவிதாமணிகள் எவ்வண்ணம் இருப்பர் என தெரியவும், ஓர் வாய்ப்பளிக்கிறது. இதோ வால்ட் விட்மன், படப்பிடிப்பு! பாருங்கள், கவியின் உருவம். கவர்ச்சியுடன் காட்சி அளிப்பதை. வால்ட்விட்மனின் கருத்துகள், பல, பாரதிதாச னுடையது போன்றே, பழைய கட்டுகளை உடைத் தெறியும் வெடிகுண்டுகள் போன்றூள்ளன. மக்களின் மேம்பாடே, வீட்மனுக்குக் குறிக்கோள். மத தத்து