பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

வார்த்தங்களிலே அவர் மயங்கவில்லை அவருடைய மணிமொழிகளிலே, சில இங்கு தருகிறோம்.

  பழைய கட்டுப்பாடுகளையும் முட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்து, கவிதைக்கும் வசனத்திற்கும் புதிய சுதந்தர ஓட்டந் தருகிறேன். ஆசான் எனினும் பாரேன்; அவன் எழுதிய வழக்கமான கருத்துக்களைத் தகர்த்தெறிவேன்.
     உள்ளத்தை வெளிப்படையாக, சீர் தளைகளுக்குக் கட்டுப்படாமல், தைரியமாகச் சொல்பவனே கவிஞன். அவன் எதுகை மோனையின் அடிமையல்லன். சொல்லிற்கும், யாப்பிற்கும் இலக்கணத்திற்குங் கூட அவன் அடிமையல்லன். அவன் அவற்றின் தலைவன்; கருத்தின் முதல்வன். அவன் ஒரு சிருஷ்டி கர்த்தா!
எந்தப் பழைய வழக்கத்திற்கும் தொத்தடிமையல்லன். பழைமைக் குட்டையில் பாசிப்படர்ந்த பழக்கங்களை ஒழித்து, அவன் வாழ்விற்கு ஓட்டமளிக்கிறான்.
  உண்மைக்கவி ஒரு தீர்க்கதரிகி. அவன் பழங்கவிகளின் எதிரொலியல்லன்; பழைய வழக்கத்தின் பின்பாட்டுக்காரன், அல்லன்.
  கவி, வெறும் நீதிப்புரோகிதன் அல்லன், உவமை யணிகளிலும், வர்ணனைகளிலும் விளையாடிக் காலங் கழிப்பவன் அல்லன்.
   கவிகள், பிறர் அறிய முடியாத அருளாவேசத்தை விளக்குவோர், நிகழ்காலத்திற்படிந்த மகத்தான எதிர் காலச் சாயலின் கண்ணாடிகள். அங்கீகாரமின்றி உலகிற்கு அறமளிப்போர் கவிகளே!
 மனிதா! நீ யாருக்கும் தலை வணங்காதே; நிமிர்ந்து நட; கை வீசிச் செல்!உலகைக் காதலி! காதலில்