பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

7


கூசாதே! செல்வச் செருக்கரை, கொடுங்கோல் அரக் கரை, மத வெறியரை ஒதுக்கித் தள்ளி, மனச்சாட்சியைத் துணைகொண்டு நட, ஏழைகளிடம் இரக்கம் காட்டு தொழிலாளருக்கு ஆறுதலளி. பாட்டாளியிடம் பரிவு கொள். தாராளமாக உதவு. உழைப்பை மதி; ஊருக்கு உதவு! உனக்கு எட்டாத கடவுளைப் பற்றித் தெரிந்ததாகப் பிதற்றதே!


எதையும் சித்தித்துப்பார் யாருக்கும் நீவீர் தாழ்ந்தவரல்லீர்! எவர்க்கும் அடிமையல்லீர்! நீவிரே தலைவர்! தலை நிமிர்ந்திடுக!


பண்டு நடந்த அற்புதங்கள்? வெறும் பொய்கள். நம்பாதீர் அகம்பாவக் கொடுங்கோலரை வீழ்த்துவீர், வீழ்ந்தோரை உயர்த்துவீர்!


இனி உலகில் புரோகிதர், சாமியார் அதிகாரம் நடக்காது. அவர்கள் காலம் மலையேறிப்போய்விட்டது ஒவ்வொருவனும், தனக்குத்தானே உபதேசியாகி விடுவான், உள்ளம் உணர்ந்து உரத்துடன் வாழ்வான். பழைய கட்டுப்பாடுகள் ஒழியும்.


மனிதா! எதற்கும் அஞ்சாதே ஆற்றலுள்ள வெற்றி வீரனென விளங்கு. வாழ்வை நடத்த முனைந்து நில்.


நமது இன்றையச் சமுதாயம், பூச்சழகில், பேச்சழகில், வெளிவேடத்தில், தன்னலப் போட்டிப்பொறாமையில், கலகலத்துப்போன அந்தநாள் வழக்கங்களில் மோகம் கொண்டு, உள்ளே உரமற்று. ஒன்றுமின்றிக் கிடக்கிறது. இந்நிலை மாறவேண்டும்.


நம் இலக்கியங்கள், வெறும் வார்த்தைக் கோவையாக உள்ளன. இலக்கியமே, நாட்டினருக்கு ஊட்ட