பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

9


 எனக்குத் தெரிந்த உலகம் ஒன்றே அது அகண்ட உலகினும் பெரிய உலகம் அது. நான்! நானே.


  முணு முணுப்பதில்லை எதற்கும். பாபத்திற்கு அழுவதில்லை, யாரையும் தொழுவதில்லை, கடவுளையும் குருக்களையும் பற்றிப் பேசிக் காதைத் துளைப்பதில்லை, இல்லை என்ற கவலை இல்லை, சேர்த்துப் பூட்டும் பித்த மில்லை முன்னோருக்குப் பணிவதில்லை. சடங்கு சங்கடம் எனக்கில்லை.


எனக்குக் கட்டில்லை, காவலில்லை, சட்ட திட்டமில்லை .


பிறர் புண்ணானால் நானும் புண்ணாவேன். மற்றவர் மகிழ, நானும் மகிழ்கிறேன்


தத்துவ ஏடுகளை விட, என் பலகணியருகே காலைக் கதிரவன் பூத்திடுவது எனக்கு களிப்பூட்டுகிறது


போனவை போகட்டும்! புத்துலகு, பேருலகு காண்போம் நாம் காணவேண்டிய உலகு, தொழில் உலகு; உறுதி உலகு! அதற்கு வழிகாண்பீர்!


நரகம் என்ற பூச்சாண்டி எனக்கு வெறும் தூசி, மோட்சம் எனும் மாயவலை எனக்கு அணுமாத்திரம்!


உயரிய கருத்துகளே!
மனிதக் குறிக்கோள்கள்!
வீரமே! ஆர்வமே, ஆற்றலே!
நீவிர், எனக்கு ஆண்டவராகுக!


இதுபோலப், பரம்பரைக்காரர் பயந்தோடும்படிப் பாடினார். புரட்சிக் கவிகளை, விட்மன்! அவரை ஒரு கவி என்று ஏற்க மறுத்தனர் கவலை கொள்ளவில்லை,