11 வாளம் உள்ள சுங்க அதிகாரியின் முன்னிலையில் நான் போய் நின்றேன். என்னுடைய பொருள்களும் அவரிடம் இருந்தன. முறைப்படி சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, என்னுடைய பெட்டிகளை அந்த அதிகாரி தாமே எடுத்துத் திறந்து, மெதுவாகப் பார்த்தபின், அவரே அவற்றைப் பூட்டி, பூட்டி யதையும் சரிபார்த்து, என்னுடைய பொருள்களின் எண்ணிக்கையைப் பார்த்து நான் இசைவைத் தெரிவித்த வுடன், சுங்கச்சோதனை முடிந்துவிட்டதாக அச்சிட்ட தாளை ஒவ்வொரு பொருளின் மீதும் ஒட்டினார். நான் ஓர் இந்தியர் என்பது தெரிந்ததும், மகாத்மா காந்தியடிகள் இறந்தது. வெற்றித் தம் வருத்தத்தை அவர் தெரிவித்தார்; என்னிடம் இருந்த தந்தச் சாமான் ஒன்றைப் பார்த்து, இந்தியரின் கலைச்சிறப்பையும் வேலைத் திறனையும் வியந்து பேசினார். இறுதியில், அமெரிக்காவில் நான் கழிக்கும் காலம் என் வாழ்நாளில் சிறந்த பகுதியாக இருக்கவேண்டுமென்று உள்ளங் கலந்த உவகை மொழி கூறி, 'சிகரெட் பாக்கெட்' ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்து, எனக்கு வந்திருந்த ஒரு தந்தியையும் என்னிடம் தந்தார். ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்குச் செல்பவர்கள் அப்புதிய நாட்டில், சுங்க அதிகாரி, சுமை தூக்கும் தொழிலாளர் வாடகைக்கார் ஓட்டுபவர், ஹோட்டல் வேலையாட்கள் ஆகியவரைத்தான் முதலில் சந்திப்பது வழக்கம். அவர்கள் நடந்துகொள்வதைப் பொறுத்தே அந்த நாட்டைப் பற்றிய கருத்து அயல் நாட்ட வரின் மனத்தில் உருவாகும். ஆகையால், இந்தியாவிலும் இப்பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் அன்பாகவும் பெருந் தன்மையாகவும் நாணயமாகவும் நடந்துகொள்ளவேண்டும். வெளிநாடுகளுடன் நல்லுறவை வளர்க்க இதனைவிடச் சிறந்த கருவி வேறில்லை. துறைமுகச் சிறப்பு எங்கள் கப்பல் நின்றது, நியூயார்க் துறைமுகத்தின் 64-ஆவது பாலம் என்பதைச் சுங்க அதிகாரி என்னிடம் தந்த தந்தியிலிருந்து தெரிந்துகொண்டேன். நியூயார்க்
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/12
தோற்றம்