155 முகத்துக்கு முகம் கண்ணாடி; பல நாட்டு மக்கள் ஒரு வரை ஒருவர் சந்தித்தால் உலகில் ஒற்றுமை நிலவும்: வெளி காடுகளைப் பற்றி நன்கு அறியவும் உதவியாயிருக்கும்; பிரயாணம்மகிழ்ச்சியானதுமட்டுமன்று; அறிவைவளர்ப்பதும் ஆகும். ஆகவே, கூடுமான அளவு மிகுதியானவர் வெளிநாடு களில் பிரயாணம் செய்ய வேண்டுமென்பதுதான் அமெரிக்கன் எக்ஸ்பிரசின் குறிக்கோளாகும். பல நாடுகளைப் பற்றிச் சரியான செய்திகளை வெளியிட்டு இவர்கள் உலக மக்களி டையே நல்லுறவை வளர்க்கப்பாடுபடுகின்றனர். எத்துறை யிலும் ஆழ்ந்து சிந்தித்துத் திட்டமிடுவதும், அதற்கு ஒரு குழு ஏற்படுத்துவதும் அமெரிக்கரின் போற்றத்தக்க பண் யாகும்; அப்பண்பாட்டுக்கு இந்தக் குழு ஓர் எடுத்துக்காட் டாக மிளிர்கின்றது. 15.ஹோட்டல்கள் யலவித உணவுச் சாலைகள் அமெரிக்காவில் பலவிதமான உணவுச்சாலைகள் உள்ளன. இவை 'காப்பிக்கடை' (Coffee shop), 'கபேடேரியா (Cafetaria), 'ஆட்டோமாட்" (Automat), 'லஞ்ச் கவுண்டர்' (Lunch Counter), 'எக்ஸ்சேஞ்ச் பஃபே' (Exchange Buffet) என்பவை ஆகும். காப்பிக்கடை என்பது நம் நாட்டு ஹோட்டல்போலச் சிற்றுண்டிகள் விற்கப்படும் கடை. கபேடேரியா என்பதும் சிற்றுண்டிகள் மட்டும் விற்கப் படும் கடையே எனினும், இது ஒரு தனி வகையைச் சேர்ந் தது. கபேடேரியாவில் பரிமாறுபவர்கள் இருக்கமாட்டார் கள். உணவு உட்கொள்ள விரும்புவோர் தாமே ஒரு தட்டை எடுத்துக்கொண்டு, உணவு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதி வழியாகச் சென்று தமக்கு வேண்டிய உணவு வகை
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/156
தோற்றம்