உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 ஹாவாய்ப் பல்கலைக்கழகத்தில் ஆசிய மக்களைப் பற்றிய ஆராய்ச்சி நடைபெறுகிறது. ஆசிரியர்களில் நான்கில் ஒரு பங்கினர் ஆசிய நாட்டினர். ஹாவா யின் பல் தீவுகளில் கல்லூரிகள் உள்ளன பசிபிக்மாக் கடலில் வாழும் மக்களைப்பற்றியும், கடல்வாழ் உயிரினங்களைப் பற்றியும் சிறப்பு வகுப்புக்கள் நடத்தப் பெறுகின்றன. இங்குள்ள பல்கலைக்கழகம் தலைசிறந்த ஆசிரியர்களை வைத்துக்கொள்கிறது. குறிப்பிட்ட கிழமைகளில் பல்கலைக் கழக விமானம் அந்த மேதைகளைத் தீவுகளிலுள்ள கல்லூரி களுக்கு ஏற்றிச் செல்கிறது. இரண்டு மணி நேரம் வகுப்பு நடத்தி, பேராசிரியர் மீண்டும் பறந்து பல்கலைக்கழகத்தை அடைகிறார். ஹாவாய் மொழி ஹாவாயில் ஆட்சிமொழி ஆங்கிலம். பேசும்போது ஹாவாய்ச் சொற்களைக் கலந்துதான் ஆங்கிலம் பேசுகிறார் கள். ஹாவாய் மொழியில் வாஹினி என்றால் பெண் என்று பொருள். அலோஹா - வணக்கம். மலாமோபோளு - கவனமாய் இரு. விக்கி விக்கி - விரைவாக ஹலே புலே - கோவில் கெளனா கெளனா-சாபம் இடுதல் லெய்- மாலை உருவில் சிறியவர்களுக்கு மிக நீண்ட பெயர் இடப்படுவது போல பசிபிக்மாக் கடலில் கிடைக்கும் மிகச்சிறிய மீனுக்கு qமுஹீ முநு குநு குவா புவா' என்று ஹாவாய் மொழியில் பெயரிட்டிருக்கிறார்கள்.