235 33. அமெரிக்காவாழ் இந்தியர்கள் நியூயார்க் பகுதியில் தான் மிக அதிகமான அளவில் இந்தியர்கள் வாழ்கின்றனர். நியூயார்க், நியூஜெர்ஸி, கனக்டிக்கட் ஆகிய மூன்று மாநிலங்களில் 75,000 இந்தியர் கள் வாழ்கின்றனர்; அமெரிக்காவில் வாழும் இந்தியர் களின் மொத்தத் தொகை இரண்டரை லட்சத்திலிருந்து மூன்றரை லட்சம் வரை இருக்கும். நியூயார்க்கில் (குவின்ஸ் மாவட்டம்) ஃபிளஷிங் என்ற சிறு நகரில் 4000 முதல் 5000 இந்தியர்கள் வரை இருக் கின்றனர். ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக அதிகமாக இந்தியர்கள் வாழ்வது இந்த ஊரில்தான். அமெரிக்காவிலும் நூற்றுக்கணக்கான இந்தியச் சங்கங்கள் இருக்கின்றன. இவை அந்தந்த மாநிலத்தவர் களின் நலனைப் பேணுவனவாக விளங்குகின்றன. நியூயார்க் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட இந்தியச் சங்கங்கள் உள்ளன. வாஷிங்டன் டி.ஸி. (அமெரிக்காவின் தலைநகர்) பகுதியில் 25 வெவ்வேறு சங்கங்கள் உள்ளன. இவையனைத்தும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தேசியச் சங்கத்துடன் (நேஷனல் அஸோஸியேஷன் ஆஃப் இன்டியன்ஸ் இன் இணைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா இன்கார்ப்பரேட்டடு) நியூயார்க்கில் இருக்கும் ஒரு குழு, நவராத்திரி விழாக் கொண்டாடுகிறது. இதில் 10,000 இந்தியர்கள் கலந்து கொள்கின்றனர். பொதுவாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் பெரும்பாலோர் பொறியியல் வல்லுநர்கள், டாக்டர்கள், விஞ்ஞானிகள், பல் மருத்துவர்கள். கட்டிடக் கலைஞர்கள்.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/237
தோற்றம்