உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 செருப்புகளையே விரும்புகிறோமோ, அதைப் போன்றே வாழ்க்கைக்கு வேண்டிய ஒவ்வொரு பொருளையும் குறிப் விட்ட புகழ் பெற்ற கடைகளில் வாங்கவே அமெரிக்கர் விரும்புவர். இவை தலைமுறையாக மக்களின் நம்பிக்கைக்கு உரியனவாய் நடந்து வருகின்றன. இவற்றில் விற்கப்படும் பொருள்கள் ஓரளவு தகுதியுடையனவாகவே இருக்கும். விருந்தினர் தாம் தங்கிய வீட்டுக்காரர்களுக்கும், நண் பர்களுக்கும்,நோயாளிகளுக்கும் பூ அனுப்புதல் சில நாடு களில் மரியாதைக்கு அறிகுறியான ஒரு வழக்கம். உதாரண மாகக் கோவையிலுள்ளவர், திருநெல்வேலிக்காரருக்குப் பூ அனுப்புவது எப்படி? கோவைக்காரர் அந்நகரிலுள்ள பூ வியாபாரியிடம் பணம் கொடுத்தால், அவர் தந்தி மூலம், திருநெல்வேலியிலுள்ள தம் கிளைக்குத் தெரிவித்து விடுவார். அந்தக் கிளையிலுள்ளவர்கள், திருநெல்வேலியில் குறிப்பிட்ட வரிடம் உரிய காலத்தில் பணம் கொடுத்தவர் சார்பாகப் பூவைச் சேர்த்துவிடுவார்கள். பணம் பத்துஞ் செய்யும் அன்றோ? விற சிறப்புக்கள் போலியான சாமான்களை விற்று மக்களை ஏமாற்றுவதைத் தடுக்கவும், எல்லாக் கடைகளிலும் விற்கப்படும் பொருள்கள் உறுதியானவையாக இருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க காடுகளில் தரக் கட்டுப்பாடு கண்டிப்பாகக் கடைபிடிக்கப் படுகிறது. அமெரிக்கா முழுவதும் ஒரே விதமான நிறுத்தல் முகத் தல் அளவைகள் இருக்கின்றன பழங்களும் மற்றும் பல பொருள்களும் எண்ணிக்கையால் அன்றி, நிறுவையாலேயே விற்கப்படுகின்றன. இன்றைய உலக வியாபாரம், போக்கர் என்னும் சீட் டாட்டத்தைப் போல் இருப்பதாகவும், லாபம் முழுவதும் ஒருவருக்கே - அமெரிக்கருக்கே- கிடைத்து விடுவதாகவும்