பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்வர்டு பல்கலைக்கழக நூலகத்தின் தலையாய படிப்பகம். ஆர்வர்டு பல்கலைக்கழக நூலகம் உலகிலேயே மிகப்பெரிய பல்கலைக்கழக நூலகமாகும். ஆர்வர்டு என்னும் பெரியார் அளித்த 400 நூல்களுடன் இந்நூலகம் கி. பி. 1688-இல் தொடங்கப்பெற்றது. படத்தில் காணும் படிப்பகம் ஆர்வர்டு நூலகத்தின் ஒரு பகுதியாகிய வைட்னர் (Widener) நூலகத்தை சார்ந்ததாகும்.இந்நூலகத்தில் ஆராய்ச்சிநூல்கள் பல உள்ளன.