பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க நூலகங்கள்

1. பொது நூலக வளர்ச்சி


நூலகம் ஒரு உயிருள்ள பொருள்

அவனி புகழ் அமெரிக்கா நாடுதான் இன்று நூலகத் துறையில் உலகிலேயே உயர்ந்து விளங்குகின்றது. நாட்டின் கலைச் செல்வங்கள் அனேத்தையும் கொண்டிலங்கும் கருவூலங்களாகிய நூலகங்களே அமெரிக்க நாட்டு மக்கள் தங்கள் கண்கள் போன்று கருதுகின்றனர். தங்கள் நாட்டில் தோன்றிய அறிஞர், கலைஞராகிய பெருமக்களுடன், அவர்களது நூல்களின் வாயிலாக நூலகங்களில் உறவாட முடிவதால் நூலகத்தினே அவர்கள் உயிருள்ள - உயர்ந்த ஒரு பொருளாகவே கருதுகின்றனர். கருதுவதோடமையாது நூலகங்களைப் பற்றி எண்ணுகின்றனர்; அவைகளின் உயர்வினைப் பற்றி உண்மையாகவே உள்ளுகின்றனர். அவைகளின் வளர்ச்சிக்காக, வாழ்விற்காகப் போராடவும் செய்கின்றனர்.

அமெரிக்கக் குடியரசின் சிறப்பியல்புகளை-பண்பு நலன்களே இப்பாரில் உள்ளார்க்குப் பளிங்கு போலப் பளிச்செனக் காட்டும் கண்ணாடிகளே நூலகங்கள் என்பது அந்நுண்ணறிவாளர்களது கருத்து. கற்கண்டினுமினிய கதைகள் படித்துக் களிப்டைய விரும்பும் கள்ளமில்லா உள்ளமுடைய இளஞ்சிறார், சிறுமியர், சொற்போரில் வெற்றிபெற விளையும் மாண்பு மிக்க மாணவர்கள், படித்துப் பட்டம் பெற்ற பின்னர் வாழ்க்கைக் கடலில் நீந்திக் கரையேற விரும்பும் கட்டிளமை-