பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

முதல் அமெரிக்க நூலகம்

முதன் முதலில் வர் சீனியாவில் (Virginia) என்ட பிக்கோ (Henrico) என்னுமிடத்தில் தொடங்கப்பட்ட கல்லூரி நூலகம்தான் முதல் அமெரிக்க நூலகமாகும். இக்கல்லுரி கி.பி. 1622-இல் தொடங்கப்பட்டது. ஆனால் அதே ஆண்டில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலகத்தின் காரணமாக இந்நூலகம் நீர்மேற் குமிழி போலாயிற்று.

முதல் பல்கலைக் கழக நூலகம்

அமெரிக்க நாட்டு முதற் பல்கலைக் கழக நூலகம் ஆர்வார்டு பல்கலைக் கழக நூலகமாகும். (Harward university Library) கி.பி. 1638 ரெவரண்ட் ஆர்வர்டு என்ற பெரியாரது பெயரால் ஆரம்பிக்கப் இப்பல்கலைக் கழக நூலகத்திற்கு, அப்பெரியார் தம்மிடமிருந்த கிடைத்தற்கரிய நாானூறு நூல்களை நன் கொடையாகக் கொடுத்துதவினார்.

சிற்றுார் நூலகங்கள்

பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில்தான் அமெரிக்க நாட்டுப் பொது நூலக வரலாறு தொடங்குகிறது என்னலாம். ரெவரண்ட் தாமசு ப்ரே (Rev. Thomas Bray) என்ற பெரியாரது பெரு முயற்சியால் சிற்றூர்களில் நூலகங்கள் பல பொது மக்களுக்காகத் திறக்கப்பட்டன.

பொது நூலகங்கள்

நாளடைவில் பொது வரிப்பணத்திலிருந்து நகர் மன்றத்தினரால் மக்களின் உபயோகத்திற்காக நூல்கள் வாங்கி வைக்கப்பட்டன. டாக்டர் கீப் என்பவர் கி.பி. 1675-இல் பாச்டன் நகரில் பொது நூலகமொன்று திறக்கப்பட்டது என்று எழுதியுள்ளார். சிலர்