பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

படுத்தியும் இத்துறையில் சிறந்த முறையில் பணியாற்ற பல நூலகச் சிற்பிகளைத் தந்தும், கூட்டங்கள் கூட்டியும், மாநாடுகள் நடத்தியும், பலருக்கு நூலகப் பயிற்சி அளித்தும், நூலகத் துறையில் ஆராய்ச்சி செய்வோர்க்குப் பொருளுதவி செய்தும், நாடு முழுவதும் மக்கள் அறியச் செய்து மாநிலங்கள் தோறும் நூலகச் சட்டத்தினைக் கொண்டு வரச் செய்தும், நூற்களைத் தேர்ந்தெடுத்து நூற்பட்டியல் வெளியிட்டும், புத்தக விமர்சனம் எழுதியும், நூலகக் கட்டுரைகளையும், அவ்வப்பொழுது துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டும், இன்ன பிற இந்த அமெரிக்க நூலகச் சங்கத்தாரால் செய்யப்படுகின்றன. இச்சங்க உறுப்பினர்களில் 600-க்கு மேற்பட்டவர்கள் பொருளுதவியும் செய்துள்ளனர்.

அமெரிக்க நூலகச் சங்கத்தாரால் 2000-க்கு மேற்பட்ட நூலக வெளியீடுகள் வெளியிடப்படுகின்றன. இவர்களால் வெளியிடப்படும் புத்தகப் பட்டியலும், கட்டுரை-செய்தித் தொகுதிகளும் (Bulletin) நூலகத்தார் யாவர்க்கும் வேதமாகும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை வெளியாகும் நூற்பட்டியலின் துணை கொண்டு, புதிய வெளியிடுகளை நூலகத்தார் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். "நல்ல நூற்கள் குறைந்த செலவில் பெரும்பான்மையான மக்களுக்குக்கிடைக்கவேண்டும்" என்ற நல்லதொரு கொள்கைக்காக இச்சங்கம் உழைக்கின்றது. அமெரிக்க நாட்டிலுள்ள மாநில நூலகச் சங்கங்களும், தனிப்பட்ட நூலகச் சங்கங்களில் பலவும், இந்நூலகச் சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்நூலகச் சங்கங்கள் தவிர, அமெரிக்க வர்த்தகர்கள் நூலகச் சங்கங்கள், பள்ளி நூலகச் சங்கங்கள், கத்தோலிக்க நூலகச் சங்கம் முதலிய சங்கங்களும் அமெரிக்காவில் செயலாற்றுகின்றன. அடுத்து அமெரிக்க