பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. காங்கிரசு நூலகம்

உலகத்திலேயே பெரிய நூலகம் காங்கிரசு நூலகமாகும். ஆயிரத்தெண்ணுறாம் ஆண்டில் (கி. 1800) இந் நூலகம் காங்கிரசுக்காகக் காங்கிரசினலே ஏற்படுத்தப்பட்டது. இன்றோ அந்நூலகம் காங்கிரசுக்கு மட்டுமின்றி உலகுக்கே பயன்பட்டு வருகின்றது.

காங்கிரசு நூலகம் அமைந்திருக்கும் இடத்தின் பரப்பளவு பதின்மூன்று ஏக்கர். அதிலே இரு பெரும் மாளிகைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றிலே நூல்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளின் பரப்பளவு (floor space) முப்பத்தாறு ஏக்கர். நூல் கட்டுகளின் அளவு 250 மைல்களாகும். இந்த நூலகத்திலே பொதுப் படிப்பகமும் தனிப்படிப்பகமும் உள. அவற்றின் எண்ணிக்கை இருபத்தொன்றாகும். இவை தவிர ஆராய்ச்சியாளர்க்கெனத் தனியாகப் பல ஆராய்ச்சிக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நூலகப் பெருங் கட்டடம் 1897 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. அது மிகவும் அழகிய முறையில் இத்தாலிய நாட்டு மறுமலர்ச்சிக் காலத்துப் பாணியில் அமைக்கப்பட்ட ஒன்றாகும். பின்னர் 1939-ஆம் ஆண்டில் மற்றொரு கட்டடமும், அதனைப் பெருங் கட்டடத்தோடு இணைக்கும் சுரங்க வழியும் கட்டப்பட்டன. இச் சுரங்க வழி மூலம் நூல்கள் ஓரிரு விடிைக்குள்ளே பல்வேறு பிரிவுக்கும் அனுப்பப்படும். மின்னூல் தூக்கிகள் (Electric Book Carriers) நூல்களை ஒரு மாடியிலிருந்து மறு மாடிக்கு அனுப்ப அருந்துணை புரிகின்றன.

இந்தப்பெரு நூலகத்திலே ஆராய்ச்சி மாணவர்க்கு வேண்டிய ஆராய்ச்சி மூலங்கள் பல்கியிருப்பது குறிப்-