பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

பிடத்தக்க சிறப்பாகும். ஏறத்தாழ 35,000,000 நூல்கள் சிறந்த சீரிய நூல்கள் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிலே ஒவ்வொரு பொருளைப்பற்றியும் பல மொழிகளிலே எழுதப்பட்ட நூல்களும், வெளிப்படுத்தப்பட்ட துண்டு வெளியீடுகளும் சேர்ந்து 10,800,000 என்ற எண்ணிக்கை உடையனவாகும். மேலும் இங்கே 155,000 செய்தி இதழ்த் தொகுதிகளும், உலகில் பல பாகங்களிலுமிருந்து வெளிவந்த பல்லாயிரக்கணக்கான செய்தி இதழ்களும், பருவ வெளியீடுகளும் உள்ளன. அமெரிக்க நாட்டு வரலாறும் நாகரிகமும்பற்றிய கையெழுத்து நூல்கள் 15, 107,000;. அருகிக் கிடைக்கும் இலபண்டாசின் (L'enfant's)' வாசிங்டன் படம் (map of washington) போன்ற படங்கள் 2,289,000;பாச்சுமுதல் எர்சின்(Bach to Gershwin) வரையுள்ள இசைத்துணுக்குகள், நூல்கள் 20,84,000;. நிழல்பட மூலங்கள், அச்சுக்கள், நிழல்பட விளம்பரத் கட்டுக்கள் 26,37,000; (இவற்றிலே பெரும்பகுதி மாத்யூபிராட்டியார் செய்தவை) பல்வித இசை, பேச்சு, செய்யுள் ஆகியவை பதிக்கப்பட்ட இசைத் தட்டுக்கள் (Photograph recordings) 464,000 ; யோசப் பென்னலின் விக்கிலெரின் தொகுதி நிறைந்த அழகான அச்சுக்கள் 5,83,260; பேசாப்படச் சுருள்கள் (motion picture reels) 1,15,000; (இவற்றிலே மிகமிக முந்திய 1894 இல் தயாரிக்கப்பட்ட தாள்படச் சுருள்களும் உள) நுண்படச் சுருள்கள் 1,21,700; நுண்ணொலித் தட்டுக்கள், சுவரொட்டிகள் , கையெழுத்துக் கருவிகள், ஒரு பக்க வெளியீடுகள் ஆகியன 8,00,000.

அமெரிக்க நாட்டு வரலாற்றுத் தொடர்பான கையெழுத்துப் படிகள் பல தனிப்பட்டோரிடம் உண்டு. அவற்றிலே மிக அதிகமான படிகள் இந்த நூலகத்திலே தான் உண்டு. அதிலே வாசிங்டன்