பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

போன்ற குடியரசுத் தலைவர்கள், படைத்தலைவர்கள் , புலவர்கள், அறிவியலாளர்கள், நாட்டுத் தலைவர்கள் ஆகியோரின் குறிப்புக்களும் உண்டு. உலகத்திலேயே மிகப் பெரிய வானொலி இலக்கியத் தொகுதியும், ரைட் மக்களைப்போன்ற பொறி வல்லுநர்தம் சீரிய குறிப்புக்களின் தொகுதிகளும் இந்த நூலகத்திலே உண்டு.

இந்த நூலகத்தில் உள்ளவற்றிலே குறிப்பிடத் தக்க சிறப்புடைய மற்றொரு தொகுதி இசைத் தொகுதி ஆம். இங்கே சப்பான், சைனா, ரசியா ஆகிய நாட்டு நூல்களும் உண்டு. கிடைத்தற்கரிய 2,30,000 நூல்கள் இங்கே சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றிலே 1501-ஆம் ஆண்டுக்கு முந்தி அச்சிடப்பட்ட 54,000 நூல்கள் உண்டு; அதுமட்டுமன்று; தாமசு செபர்சன் (Thomas Jefferson) நூலகத்திலிருந்து வாங்கப்பட்ட 2,400 நூல்களும் இங்கு உள்ளன. இந்த நூலகம் முதன் முதலில் தலை நகரில் இருந்தது. இந் நூலகக் கட்டடம் 1814 இல் ஆங்கிலப் படை மூட்டியதியில் அழிந்து விடவே வேறொரிடத்திற்கு மாற்றும்பொழுது, அஃதாவது 1815-ஆம் ஆண்டில், யெவர்சன் நூலகமும் காங்கிரசு நூலகத்துக்காக வாங்கப்பட்டது.

காங்கிரசு நூலகத்திலே சட்ட நூலகமும் உண்டு. அங்கே உலகச் சட்ட நூல்கள் அவ்வளவும் உண்டு. சட்ட நூல்கள் 8,75,000 அங்கே உண்டு. இவற்றோடு 2,50,00O சட்ட நூல்கள் (General collctions) பொது நூலகத்தில் உண்டு. கி.மு. இரண்டாயிரத்திலிருந்து தற்காலம் வரையில் உலகிலே ஏற்பட்ட சட்டங்கள், ஒவ்வொரு காலத்திலும் எழுதப்பட்ட சட்டநூல்கள் அத்தனையும் உண்டு. இவற்றிலே பல மொழிகளிலும் எழுதப்பட்ட சட்ட நூல்களும் உண்டு; பல நாட்டுச் சட்ட நூல்களும் உண்டு. எனினும் அமெரிக்க நாட்டுச் சட்ட நூல்களே மிக அதிகமாக உள்ளன. சட்டத்-