பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

துறையே தலை வனங்கும் சில சட்ட இலக்கியங்களும் இங்கே உண்டு. தலேநகரிலே இதன் கிளைநூலகம் (Branch) ஒன்று காங்கிரசு உறுப்பினர் நலத்துக்காக நடத்தப்பட்டு வருகின்றது.

அமெரிக்க வரலாறு, அரசியல், நூல் சேர்க்கை, நூலகவியல், வெளியீடுகள், செய்தி இதழ்த் தொகுதி, படத்தொகுதி முதலிய பல துறைகளிலும் இக் காங்கிரசு நூலகம் பல்கிப் பெருகி வருவதை விளக்கி உரைத்தல் என்பது உறுதியாக இயலாத ஒன்றாகும். நூலகத்துக்கு வருவோர் நன்கு பயன்படுத்துகின்றனவற்றிலே மிகச் சிறந்த ஒன்றிரண்டைவிட அதிகமாக இயம்புதலும் எளிதன்று. அனைவரும் நன்கு மதிப்பன, பொருட்காட்சிக்கு வைக்கப்படும். அவற்றிலே ஒன்று குடன்பர்க் பைபிள் (Gutenberg Bible) என்பது. இதுவே மேலே நாட்டில் இயக்கச்சிலே(movable metal type) முதன் முதல் அச்சடிக்கப்பட்ட நூலாகும். அமெரிக்க நாட்டிலேயே சிறந்த தோல் நூல் இதுவேயாகும். இதுமட்டுமன்று; மெயன்சின் பெரும் பைபிள் (ஐந்நூறாண்டுப் பழமையுடையது) தாமசு செபர்சன் (Thomas Jefferson) தன் கைப்பட எழுதிய "விடுதலே முழக்கம்" மடல், ஆப்பிரகாம் லிங்கனால் எழுதப்பட்ட கெட்டிச்பர்க் பேச்சு ஆகியனவும் இந்த நூலகத்திலே உள.

இப்பெரு நூலகம் காங்கிரசுக்காகவே ஏற்படுத்தப்பட்டமையால், நூலகத்தின் ஆறுபெரும் பிரிவுகளுள் ஒன்றான "சட்டக் குறிப்புப் பகுதி" காங்கிரசுக்குப் பேருதவி புரிந்து வருகின்றது. 1956-இல் இப் பகுதி காங்கிரசு உறப்பினர்களும், பிற குழுக்களும் விடுத்த 59,100 வினாக்கட்குத் தக்க விடையளித்தது. இப் பகுதி, போன்ற பிற பகுதிகளும் காங்கிரசுக்குப் பேருதவி வருகின்றன. எனினும் இவை அறிஞர்க்கும்