பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

குடியேற்ற நாடுகளிலுமுள்ள 55,752 குருடர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இப்பெரு நூலகத்தின் முக்கியத் துறைகளுள் ஒன்று பதிப்புரிமைத் துறை (Copy right ofice) ஆகும். பதிப்புரிமை செய்யப் பெற்ற நூல்கள், இசைத்தட்டுக்கள், அசைப்படங்கள் (Motion Pictures) முதலியன நூலகத்திலே காணப்படும். 1956-ஆம் ஆண்டில் மட்டும் 2,24,901 ஆவணங்கள் (Registrations) பதியப்பட்டு அதன் மூலம், 8,81,612 பவுன் வருவாய் வந்துள்ளது.

படச்சுருள், இசைத்தட்டு, நூல் ஆகியவற்றுக்குரிய பட்டியல் அட்டைகளே (Catalogue cards) நூலகமே அச்சடிக்கினறது. மேலும் கூட்டுறவு நூலகங்களுக்காகவும் அட்டைகள் இதனால் தயாரிக்கப்படுகின்றன. பட்டியல் அட்டைகள், பட்டியல்கள், நூற்பதிவுத் தாள்கள் (Accession Lists) முதலியன இப்பெரு நூலகத்தால் விற்கப்படுகின்றன. 1956-ம் ஆண்டில் இத்தகைய அட்டைகள், பட்டியல்கள் மொத்தம் 24,692,000 விற்கப்பட்டன. அவை மூலம் நூலகம் பெற்ற வருவாய் 1,8,11,897 பவுன் ஆகும். இவ்வளவு வருவாய்ப் பவுன்களேயும் நூலகம் அமெரிக்கக் கருவூலத்தில் சேர்த்து வைத்துள்ளது.

நாடோடிப்பாடல் தட்டுக்களும், கவிஞர்களே பாடிய பாடல் தட்டுக்களும் தயாரிக்கப்பட்டு இந்த நூலகத்தால் விற்கப்படுகின்றன. அமெரிக்க நாடோ டிப் பாடல் துறை சில பாடல்களையே தட்டாக்கி வைத்திருந்த போதிலும், இந்நூலகம் தனிப்பட்ட முயற்சி எடுத்துக் தன் ஆட்களை நாடெங்கனும் அனுப்பி நாடோடிப்பாடல்கள் அத்தனையையும் தட்டாக்க முயன்று கொண்டு வருகிறது. இந்த நூலகத்திலே 2,50,000 நாடோடிப்பாடல் தட்டுக்கள், (tapes of folk