பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


காங்கிரசு நூலகத்தைப் பயன்படுத்துவது எப்படி?

இது காங்கிரசினுடைய நூலகமாக இருந்தபோதிலும் பொதுமக்களுக்கும் பயன்படும் பொது நூலகமாகவம் விளங்குகின்றது. நூலகத்திற்கு எல்லோரும் வரலாம்; கட்டணமோ, பரிந்துரைக்கடிதமோ தேவையில்லை. நூலகத்தின் குறிக்கோளே பல்லாயிரக் கணக்கான மக்களுக்குப்பயன்பட வேண்டும் என்பதே.

நூலகத்திற்குப் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்களேகள் வர முடியும். அதற்குட்பட்டவர்கள் பெரியோர் ஒருவருடன் நூலகத்திற்கு வரலாம். பார்வையாளர்கள், பார்வையாளர் இடத்திலிருந்து பொதுப்படிப்பகத்தைப் (General Reading Room) பார்குகலாம். பார்வையாளர் இடத்துக்கு மின்தூக்கி மூலம் மேற்செல்லலாம். வாயில்களிலிருந்து தாமசு செபர்சன் படிப்பகத்தையும் பிற படிப்பகங்களேயும் பார்க்கலாம்.

பொதுப் படிப்பகங்கள்

காங்கிரசு நூலகத்திலே இரண்டு பொதுப் படிப்பகங்கள் உள. அவை யாவன:- நூலகத்தில் உள்ள முக்கியப் படிப்பகம்; பக்கத்துக் கட்டடத்திலுள்ள செபர் சன் படிப்பகம். பொது நூலகத்தில் உள்ள எந்த நூலேயும் இப்படிப்பகங்களிலே காணலாம்.

பொது நூற்பட்டியல்கள் (General Catalogues)

நூலகத்தின் நூற்பட்டியல் பொது நூற்பட்டியல் எனப்படும். இது பொதுப்படிப்பகத்திலே காணகாணப்படும். துணை நூற்பட்டியல் ஐந்தாவது மாடியிலுள்ள செபர்சன் படிப்பகத்தின் அருகிலுள்ள கூடத்திலே வைக்கப்டிருக்கும்.