பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


இந்த இரண்டு பட்டியல்களும் அட்டைப்பட்டியல்களே. அவை அகர வரிசையிலே முறைப்படுத்தப் பட்டிருத்தலின் அகராதிப்பட்டியல் (DictionaryCatalogue) எனவும் அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக நமது திருக்குறள் அங்கே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்நூலுக்கு மூன்று அட்டைகள் இருக்கும். ஒன்று நூலாசிரியர் அட்டை ; மற்ருென்று நூலட்டை ; பிறிதொன்று கீழை நாட்டு இலக்கிய அட்டை. நூலாசிரியர் அட்டை அகராதியில் "தி" என்ற எழுத்திலே திருவள்ளுவர் என்ற பெயர் கானப்படும். நூலட்டையகராதியிலே "தி" என்ற எழுத்திலே திருவள்ளுவர் காணப்படும். கீழைநாட்டு இலக்கிய அட்டையகராதியிலே திருக்குறள் "தி" என்ற எழுத்திலே காணப்படும்.

பொதுநூற்பட்டியல் என்பதும் இணை நூற்பட்டியல் என்பதும் காங்கிரசு நூலகத்தின் நூல்கள் அவ்வளவையும் அடக்கிக் கொண்டவையாக இருந்த போதிலும், பொது நூற்பட்டியலின் சிறப்பு எதுவெனின் அது கையெழுத்து ஏடுகள், அட்டைகள் தயாரிக்கப்பெறாத நூல்கள் ஆகியவற்றையும் கொண்டிருக்கும் என்பது தான். எனினும் இணை நூற்பட்டியல் பிறநூலகங்களிலே இல்லாத நூல் அட்டைகளேயும் கொண்டிருக்கும்.

இந்த இரண்டோடு தேய நூற்பட்டியல் ஒன்றும் உள்ளது. இதில் பொது நூற்பட்டியலில் இல்லாத பெயர்களும் காணப்படும். அரிதின் சேர்த்த அரிய நூல்கள் பற்றிய பட்டியல் ஒன்றும் உள்ளது.

இந்த நூலகத்திலே நூலெடுக்க விரும்புவோர் செய்ய வேண்டியன :

1. முதலில் நூலின் பெயர், நூலாசிரியர் பெயர் ஆகியன பதியப்பட்டிருத்தலைப் பார்த்தல் வேண்டும்.