பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


2. பிறகு நூலெடுத்தற்குரிய துண்டுத்தாளில் (Call Slip) நூலினைப் பற்றிய விளக்கம், நூலின் பெயர், நூலாசிரியர் பெயர் எழுதப்படவேண்டும்.

3. காலி இருக்கை ஒன்றைப்பார்த்து அமர்ந்து, துண்டுத்தாளில் (Slip) நூலின் வகைப்படுத்திய எண்ணை எழுதுதல் வேண்டும்.

4. பின் துண்டுத்தாளை உரிய பணியாளரிடம் தரல் வேண்டும்.

பருவ வெளியீடுகளை எப்படி எடுப்பது?

பருவ வெளியீட்டுத் தொகுதிகளும், நூலகத்தைச் சேர்ந்த நூல்களைப் போன்றவையாகும். தொகுக்காத வெளியீடுகள், புதிய அரசாங்க அறிக்கைகள், தொகுக்கப்பட்ட, தொகுக்கப்படாத செய்தி இதழ்கள் ஆகியன எல்லாம் இதற்கென உள்ள படிப்பகத்திலே பரப்பப் பட்டிருக்கும்.

இங்குள்ள வெளியீட்டுத் தொகுதிகளை வாங்க ஆசிரியர் பெயர் தேவையில்லை. தொகுதியின்பெயர், தொகுதியின் எண், அல்லது நாள் ஆகியன குறித்தால் போதும். பருவ வெளியீட்டிற்குரிய முதற்குறிப்புக்கள் குறிப்பு நூலகத்திலேயே காணப்படும்.

குறிப்பு நூலகம் (Reference Section)

வருவார்க்கு நற்றுணை புரியக் குறிப்பு நூலகத்திலே பணியாட்கள் பலர் இருப்பர். அவர்கள் வேண்டிய அரும் பெரும் நூல்களையும், அவைபற்றிய குறிப்புக்களையும் நூல்கள் இருக்கும் இடங்களையும், முறையே வழங்கியும், சேர்த்துத் தந்தும், விளக்கியும் சுட்டியும் உதவி செய்வர்.