பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

மாளிகையினைப் பல்வேறு கோணங்களில் எடுத்த நிழற்படங்கள் முதலியவை இங்கு விற்கப்படும்.

சுருக்கெழுத்தாளர்; மொழிபெயர்ப்பாளர்

இந்நூலகத்திலே பொதுமக்களுக்குப் பயன்படும் சுருக்கெழுத்தாளரோ, மொழிபெயர்ப்பாளரோ இலர். வேண்டுமானால் அவர்கள் இருக்கும் இடம், அவர்கள் பெயர்கள் முதலிய விளக்கங்களை இந்நூலகம் வழங்கும்.

நூலகக் கடன் முறை

நூலகங்களுக்கிடையே நூல் கொடுவினை கொள்வினை உள. நூலகம் தன்னிடம் இல்லாத நூல்களைப் பிற நூலகங்களிலிருந்து பெற்று வேண்டுவோருக்கு அளிக்கும். நூல் போக்கு வரவுக்குரிய செலவை வேண்டுவோர் ஏற்றுக்கொள்ளல் வேண்டும்.

கடன் உரிமை

காங்கிரசு நூலகம் ஒரு குறிப்பு நூலகமென்றே சொல்லலாம். எனவே கற்று வல்ல பெரியோர்கள், உயர்தர அதிகாரிகள் போன்ற குறிப்பிட்ட ஒரு சிலருக்கே இந்நூலகம் நூல்களை வழங்கும். கொலம்பியாப் பொதுநூலகம், உள்ளுர்மக்களுக்கு வீடுகளில் வைத்துப் படிப்பதற்கு வேண்டிய நூல்களை வழங்குவதால், காங்கிரசு நூலகம் எப்போதாவது ஓரிரு தடவைகள்தான் நூல்களை வீட்டுக்கு வழங்கும்.

பொது விதிகள்

மேல்சட்டைகள் போன்றன வாயிலிலேயே கழற்றி வைக்கப்படல் வேண்டும். அப்பொழுதுதான் எல்லா