பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


பொது விதிகள்

ஆராய்ச்சி அறையைப் பயன்படுத்த விரும்புவோர் முதலில் படிப்பகப் பகுதி முதல்வரிடம் பதிவுசெய்தல் வேண்டும். ஆராய்ச்சி அறை ஒருவருக்கு ஒருவார காலத்திற்கே ஒதுக்கப்படும். ஆராய்ச்சியின் தன்மை, ஆராய்ச்சி மாணவரின் தகுதி, அவர் இதற்கு முன்பு ஆராய்ச்சி அறையையும் நூல்களையும் பயன்படுத்திய முறை ஆகியவற்றைப்பொறுத்துக் காலநீட்டிப்பும் செய்யப்படும். ஆனால் எப்படிப்பட்ட ஆராய்ச்சி மாணவராக இருப்பினும் ஆறு திங்கட்குமேல் ஆராய்ச்சி அறையைப் பயன்படுத்த முடியாது. இந்தப் பொது விதிக்கு விலக்காகச் சில சமயங்களில் சிலர் மேலும் நூலகத் தலைவரால் அனுமதிக்கப்படுதலும் உண்டு. இந்தக் காலமும் கழிந்த பின்னர் மறுபடியும் ஆராய்ச்சியறை தரப்படவேண்டுமானல் மறுபடியும் விண்ணப்பம் செய்யப்படல் வேண்டும். அந்த விண்ணப்பம் எடுத்துக்கொள்ளப்பட்டு வாய்ப்பு அளிக்கப்படும் வரை ஆராய்ச்சியாளன் அந்த ஆராய்ச்சி அறையைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாது.

இக்கட்டான சில சமயங்களிலே ஆராய்ச்சியறை தருவது தடைப்படாது எனினும், ஆராய்ச்சி ஒப்புதலே எந்த நேரத்திலும் முறிக்க நூலகத்துக்கு உரிமை உண்டு. படிப்பறைகள், நூலகங்கள் முதலியன எல்லாம் ஆராய்ச்சியாளர்க்கே ஒதுக்கப்படல் வேண்டும். இவற்றைப் பிறர் பயன்படுத்தவே கூடாது. இங்கு நுழையவேண்டுமானல் அதற்கென அச்சடிக்கப் பட்ட அட்டையைப் பயன்படுத்தல் வேண்டும். பார்வையாளருக்காக முன்கூட்டியே படிப்பறைகளேத் தயார் செய்திருத்தல் வேண்டும். படிப்பறைகள் நூலக நேரத்திலேயே பயன்படுத்தப்படல் வேண்டும்.