பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


நூலகத்துக்கு வரும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் தட்டச்சுக்களையே கொண்டு வரல் வேண்டும். நூலகத்தில் குறிப்பிட்ட சில இடங்களிலே ஒலியிலா அச்சுத் தான் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்படும். நாம் நூலகத்துக்குக் கொண்டு செல்லும் பொருட்களையும், கருவிகளையும் நூலகத் தலைவரின் ஒப்பம்பெற்றே உள்ளே கொண்டு செல்லவேண்டும். நாம் கொண்டு செல்லும் பொருட்கள் பற்றிய அட்டவணை இரண்டைத் தயாரித்து ஒன்றைப் படிப்பறைக்குள் வைத்தல் வேண்டும். நமது பொருள்கள் தொலையுமானல் அதற்கு நூலக அதிகாரிகள் பொறுப்பாளிகள் அல்லர்.

உரிய காலம் முடிந்த பின்னர் ஆராய்ச்சியாளர் உடனே தம் பொருள்களை யெல்லாம் எடுத்துச் சென்று விடுதல் வேண்டும். நூலகத்திலே இவற்றைக் காத்து வைத்தற்குரிய வாய்ப்புகள் கிடையா. ஆராய்ச்சியாளர் தம் பொருட்களே எடுத்துச் செல்லாவிடின், அவை:அவர் தம் இல்லங்கட்கு எடுத்துச் செல்லப்படும்.

ஆராய்ச்சியாளர்கள் தமது அறைகள், பெட்டிகள், சுவரறைகள் ஆகியவற்றுக்குரிய திறவுகோல்களை முன்பணம் கட்டிப் பெற்றுக்கொள்ளலாம். நூலக அதிகாரிகள் நினைத்தபொழுது வந்துஅவற்றைச் சரிபார்க்கலாம். ஆராய்ச்சி முடிந்தவுடன் திறவுகோல்கள்,நூலகத்திலே திரும்ப அளிக்கப்படல் வேண்டும்.

தொலை பேசிகள்

படிப்பறைகளிலே உள்ள தொலை பேசிகள் நூலக அதிகாரிகளுக்காகவே அமைக்கப்பட்டுள்ளன.எல்லோரும் பயன்படுத்தற்கெனத் தனித் தொலை பேசியும் உள்ளது. அதன் மூலம் பிறர் ஆராய்ச்சி மாணவரோடு