பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

பேசலாம். பேச்சின் தவறுதலுக்கு நூலக அதிகாரிகள் பொறுப்பாளராகார். தொலைதொலைபேசிகளைப் பயன்படுத்த திங்கட் கட்டணம் உண்டு. தொலேபேசியைப் பயன்படுத்தப் போவதில்லையானால் அதனை முன்கூட்டியே தெரிவித்துவிடல் வேண்டும்.

ஆராய்ச்சியாளர் நூலகக்கடிதத்தாளைப் பயன்படுத்தல் கூடாது. ஏனெனில், அவ்வாறு பயன்படுத்தும் உரிமை நூலகத்தாருக்கே உண்டு. ஆராய்ச்சியாளர்க்கு வரும் விவிரைவஞ்சல்களை நூலகம் ஏற்காது.

ஆராய்ச்சியாளர்கள் தங்கள் அறைகளை அழகாகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்ளல் வேண்டும். புகைப் பிடிப்பதற்கென ஒதுக்கப்பட்டுள்ள அறைகளையே பயன்படுத்தல் வேண்டும். பிற இடங்களில் புகைப் பிடித்தல் தவறாகும்.

அறைகளுக்கு மின் விளக்கிடல், குளிர்ப் பெட்டிகள் வைத்தல், மேலும் அறையை ஒழுங்கு படுத்தல் போன்றன வேண்டுமானால் படிப்பறை அலுவலகத்துக்கு வேண்டுகோள் செய்தல் வேண்டும். அவர்களே வற்புறுத்தல்முடியாது. இங்கே உணவுஉண்ணுதல்கூடாது. ஏனெனில் உணவு மூலம் நூலைக் கெடுக்கும் நச்சுக் கிருமிகள் தோன்றி வளர்தல் கூடும்.

நூலை எடுத்து வைப்பதற்குரிய விதிகள்

நூலகத்திற் சேர்ந்த ஆராய்ச்சி மானவர்கள் வேண்டிய நூல்களைத் தங்களுக்காக எடுத்து வைக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்குரிய விண்ணப்பத்தைத் தரல் வேண்டும். அந்த விண்ணப்பங்கள்