பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


நூலகப் படிப்பகங்களிலே கிடைக்கும். விண்ணப்பஞ் செய்த பின்னர் நூல்கள் நேராகப் படிப்பக அறைக்கே கொண்டுவந்து வைக்கப்படும். நூலகத்தை விட்டு வெளியேறிய நூல் உடனே தேவைப்படுமானால், படிப்பக அலுவலகம் அதனைப்பெற முயற்சி எடுக்கும். ஆராய்ச்சி மாணவர்கள் நூலெடுக்கும் அட்டைகள் வைத்திருந்தால் அவர்களே நேராக நூல் தட்டுக்களிலிருந்து நூல்களை எடுத்துக்கொள்ளலாம்.

எடுத்து வைப்பதற்குரிய அடையாளச்சீட்டு இல்லாத எந்த நூலையும் நூலகம் மூடிய பின்னர் படிப் பறைக்குள்ளே வைத்திருத்தல் கூடாது. இந்த அடையாளச் சீட்டின் மூலம் நூல் பயன்படும் இடத்தைக் கண்டு கொள்ளலாம். இந்த முறை மிகவும் நலலதோர் முறையாகும் ; ப ய ன் மி க அளிக்கும் முறையாகும். எனவே நூலகத்தாரும் படிப்போரும் இதற்கு ஒத்து ழைக்க வேண்டும். அடையாளச் சீட்டில் இருக்க வேண்டியன பின் வருமாறு:–

1. நூல் தட்டு எண், நூற் பெயர்த்தாளின் பின் புறத்தில் காணும் எண், நூல் எண் ஆகியவற்றை எழுது தல் வேண்டும்.

2. ஆசிரியர் பெயர், ஆசிரியரின் இயற் பெயர், ஒரு காற்புள்ளி, பின் அவர் தம் பட்டப்பெயர்கள் ஆகிய வற்றைப் பதிதல் வேண்டும். நூல் பல்லாசிரியர் கூட்டு முயற்சியால் எழுதப்பட்டிருக்குமானல் நூற்பெயரின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளபடி எ ழு து த ல் வேண்டும். ஒவ்வொரு ஆ சி ரி ய ரி ன் பெயர் முதலெழுத்தைப் பொறித்தலும் நல்லது.