பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


3. நூற்பெயரின் முதல் ஐந்தாறு எழுத்துக்களே எழுதினால் போதும். ஒரு பெயரிலே பல தொகுதிகள் இருக்குமானால் அவற்றிற்கு ஒன்று, இரண்டு என்ற வரிசை எண்களைக் கொடுத்து அவற்றைப் பதிதல் வேண்டும்.

4. நூல் வெளியிட்டவர், வெளியிடப்பட்ட இடம், வெளியிடப்பட்ட தேதி ஆகியவற்றைப் பதிதல் வேண்டும்.

எடுத்து வைத்ததற்குரிய அடையாளத்தாளை உரிய நூலிலே செருகி வைத்தல் வேண்டும். ஒரு நூலை முப்பது நாட்களுக்கே எடுத்து வைக்க முடியும். இறுதி நாளிலே நூல்கள் திரும்பப் பெறப்படும். நூல்கள் திரும்பப் பெற்ற பின்னர், அவை தரத்தயார் என்ற அடையாளச் சீட்டு அவற்றிலே வைக்கப்படும்.

இவ்வாறு எடுத்து வைக்கும் நூல்கட்கென ஒரு குறிப்பேடு போடப்பட்டிருப்பதால், இந்த ஏட்டிலே பதியப்படாத எந்த நூலையும் அறையிலிருந்தோ, படிப்பகத்திலிருந்தோ, நூல் தட்டுக்களிலிருந்தோ எடுத்தல் கூடாது. ஆராய்ச்சியாளர், தான் நூலகத்தை விட்டு நீங்சிச் செல்லும்பொழுது எல்லா நூல்களையும் தவறாமல் ஒப்படைத்துவிட்டுச் செல்லல் வேண்டும்.

ஆராய்ச்சி மாணவர்கள் எவ்வித இடையூறும் இன்றிப் படிப்பதற்காக நூலகத்தார் எல்லாவித முயற்சிகளும் எடுப்பர். ஆராய்ச்சியாளர்கள் இவ்விதிகளே நினைவிற்கொளின் நன்கு படித்துப் பயன் பெறலாம்.