பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

கொண்டன. போட்டியில் வெற்றி பெற்றவருக்குப் பரிசும் அளிக்கப்பட்டது.

திருவாட்டி கோலிட்ச் அம்மையாருக்குப் பாடுவதிலும் பாட்டுக்களை இயற்றுவதிலும் வேட்கையதிகம். அவர் தமது உலகப் பயணத்தின்போது அங்கங்கே வாழும் இசைவாணர்களை காண்பதும், அவர்களோடு சேர்ந்து பாடி மகிழ்வதும் அவரது வழக்கம். அவர் பற்பல இசைவாணர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். இதனால் இசைக் கலையின் வளர்ச்சி மிகுதிப்பட்டது என்னலாம்.

1924-ஆம் ஆண்டில் அவர் தென்மலையை விட்டு வாசிங்க்டனில் குடியேறினர். சிறந்ததோர் இசை மண்டபம் கட்டுவதற்காக அவர் அமெரிக்க அரசுக்குப் பணமளித்தார். இவ்வாறு முதன்முதல் அளித்தவர் இவரே. இவர் அளித்த பணத்தின்மூலம் காங்கிரசு நூலகத்தின் ஒரு பக்கத்தில் இவர் பெயரால் ஓர் இசை மண்டபம் கட்டப்பட்டது. இது ஒலிநூல் முறைப்படி 526 பேர் கொள்ளும் அளவில் கட்டப்பட்டது. இது கட்டப்பட்ட காலை அதே அம்மையார் அரை மில்லியன் டாலர்களை அளித்தார். இந்த நிதியை நூலகத்தின் இசைத்துறையதிகாரியும், நூலக அதிகாரியும், இசைத் துறைத் தலைவரும், மற்றொருவரும் மேற்பார்வை செய்தனர்.

இந்த இசை மண்டபத்தின் திறப்புவிழா 1925-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அப்பொழுது மூன்று நாள் இசைவிழா நடைபெற்றது. அதிலிருந்து இதுபோன்ற 12 விழாக்கள் நடைபெற்றன. கடைசி விழா 1956ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்தது. ஒவ்வொரு விழாவிலும் அம்மையார் இயற்றிய பாக்கள் பாடப்பட்டன.