பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. அமெரிக்காவின் ஆட்சி ஒலை மன்றம்

அமெரிக்க அரசாங்கம் அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகளையும் அதன் பிற குறிப்புக்களையும் அலுவல்களைப் பற்றிய வெளியீடுகளையும் சேர்த்து வைக்கும் இடம் ஆட்சிஓலை மன்றமாகும்.

இந்த மன்றத்திற்குள் ஒரு வரலாற்றாசிரியர் நுழைவாரானால், அமெரிக்கப் புரட்சி பற்றிய அரிதான ஏடுகளைக் கண்டு படிக்கமுடியும். வணிகர்கள் தமது முக்கிய பேரேடுகளைக் காத்து ஓம்புவது எப்படி என்பதை இந்த மன்றத்தாரிடமே கேட்டறிந்து கொள்ளுகிறார்கள்.

இவை ஆட்சிஓலை மன்றத்தார் செய்யும் முக்கியப் பணிகளிற் சிலவாகும். இந்த மன்றம் 1934ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டதாகும். பலவகையான ஆட்சிஓலைகளையும் பொதுமக்களுக்குக் காத்துக் காண்பிப்பதும், சேர்ப்பதும், சேர்த்து வைப்பதும் இந்த மன்றத்தின் வேலைகளாகும்.ஓலைகளோடு படங்களையும், இசைத்தட்டுக்களையும் சேர்த்துவைப்பதும் இந்த மன்றத்தின் வேலையாகும்.

இன்றைய ஆட்சிஓலை மன்றத்தின் அளவு 900,000 கனஅடியாகும். ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், பிற குறிப்பிடத் தக்கவர்கள், ஆகியோருக்கே இந்த மன்றத்தின் அறிக்கைகளைக் காண இயலும். இந்த மன்றம் ஒரு இலட்சம் நூல்களும் அரசாங்க அறிக்கைகளும் கொண்ட ஒரு தனித்துறையை ஆராய்ச்சியாளர்க்கென ஒதுக்கி வைத்துள்ளது.

இந்த மன்றத்தின் தலையய பணி அறிக்கைகளை அறிவியல் முறைப்படிக் காத்தலாகும். இதற்கென வல்லுநர்கொண்ட ஒரு துறை உள்ளது. அறிக்கைகள்