பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. நாட்டுப் பாடல்கள்

அமெரிக்காவிலே மக்களிடையே நாள்தோறும் பாடப்பட்டுவரும் நாட்டுப் பாடல்களைச் சேர்த்துவைப்பதற்கென ஒரு மன்றம் உள்ளது. அது 1928ஆம் ஆண்டில் தோன்றியது. அந்த மன்றத்தின்மூலம் நாட்டுப் பாடல்களுக்கு அமெரிக்க நாட்டு மக்களிடையே நல்ல மதிப்பு உள்ளது. வாசிங்க்டன் நூலகத்திற்கு அண்மையில் நாட்டுப்பாடல் நூலகம் உள்ளது. எந்த மொழி பேசினும் சரி ; எந்த நாட்டுக்காரராக இருப்பினும் சரி ; அவர்கள் சாதிமத மொழி நிறவேற்றுமை கடந்து இன்புறுவது இந்த நாட்டுப்பாடல் மன்றத்திலேதான்.

மேற்கு வெர்சீனியா மலையில் வாழும் எழுபத்தொரு வயதுக் கிழவரின் பிடில் பாட்டையும், இந்தோனேசியா மாணவர் பாட்டையும் இன்று சென்றாலும் நாம் இங்கே கேட்டோ, பாடியோ மகிழலாம்.

இங்கே இரண்டு அறைகள் உள. ஒன்று நாட்டுப் பாடல் ஆராய்ச்சியாளர்க்கு; மற்றென்று பொதுமக்களுக்கு. 16000-க்கு மேற்பட்ட இசைத் தட்டுக்கள் உள்ளன. அவற்றிலே ஏறத்தாழ அறுபதாயிரம் பாடல்கள் - பலவகைப்பட்ட கருவிப் பாடல்கள் உள்ளன. இவற்றை எப்பொழுதுவேண்டுமானலும்நாம் சுவைத்து இன்புறலாம்.

பிற நாட்டிலே நடம்புரியும் நாட்டுப் பாடல்களையும் இந்த மன்றத்தார், அஃதாவது நாட்டுப் பாடல் மன்றத்தார் இசைத் தட்டுக்களிலே பிடித்துவைத்துக் கொண்டுள்ளனர். அயல் தேச நாட்டுப் பாடல்களுக்கெனச் சில திட்டங்கள் உள்ளன. அதன்மூலம் அயல்நாட்டு அரசாங்கம் அனுப்பும் பண்பாட்டுக் குழுக்கள் பாடும்