பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

பாடல்களை இசைத் தட்டுக்களிலே பிடித்துக்கொளல் வழக்கம். அயல் நாட்டு வானொலிகளிலே ஒலி பரப்பப்படும் நாட்டுப் பாடல்களையும் பிடித்துக்கொளலும் பழக்கம் ஆம்.

நாட்டுப் பாடல் மன்றத்துக்குப் பிற அமெரிக்க வாணிக நிலையங்களும் உதவிசெய்து வருகின்றன. இவை பிறதேச நாட்டுப் பாடல்களைப் பிடித்துவைத்துக் கொண்டு அவற்றின் படிகளில் ஒவ்வொன்றை நாட்டுப் பாடல் மன்றத்துக்கு அனுப்புகின்றன. அவ்வாறு. அனுப்பப்பட்ட இசைத்தட்டுக்களைச் சேர்த்துப்பட்டியல் தயாரிப்பது இந்த மன்றத்தின் வேலையாகும். சில தனிப்பட்ட நிறுவனங்களும் இந்த மன்றத்தின் வேலலகளுக்குப் பேருதவி செய்து வருகின்றன. 1940-ஆம் ஆண்டில் கார்னிக் மன்றம் இந்த நாட்டுப்பாடல் மன்றத்துக்கு இசைத் தட்டுக்கூடம் ஏற்படுத்த பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை அள்ளித் தந்தது.

அமெரிக்காவில் இவ்வாறு நாட்டுப் பாடல்களில் மக்களுக்கு வேட்கை யுண்டாக்கியவர் லோமாக்ச் என்பவராவார். சென்ற நூற்றண்டிலே பிறநாட்டு அறிஞர் சிலர் தத்தம் நாட்டுப் பாடல்களின் அருமை பெருமைகளை அறிந்து அவற்றைப் பேண நினைத்தனர். அதனைக் கண்ட அமெரிக்கர்கள் இந்த நூற்றண்டு தங்கள் நாட்டுப் பாடல்களைக் காக்கத் தொடங்கிவிட்டனர்.

லோமாக்ச் என்பவரை நம்பி ஒரு பெருங் குடும்பமே. வாழ்ந்து வந்தது. அந்தக் குடும்பத்துக்கு நாளும் உணவு அளிக்கவேண்டியது அவர் பொறுப்பு. அதனால் அவர் நாளும் அதற்கென உழைக்க வேண்டியதாயிருந்தது. என்றாலும் தமது அன்றாட வேலைகளுக்கிடையேயும் அவர் கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் சென்று சென்று நாட்டுப் பாடல்களைப்பற்றிச் சொற்-