பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

லிருந்து வேளாண்மை, வாணிகம் முதலிய துறைகளின் நூல்களே வாங்கப்பட்டன. 1930 ஆம் ஆண்டிற்குப் பிறகு டாக்டர் ஒரேசர் போலமன் என்பவரின் கருத்துரையின் பேரில் இந்திய வெளியீடுகளையும், பிற வரலாற்று நூல்களையும், பலமொழி நூல்களையும் அமெரிக்கக் காங்கிரசு நூலகம் வாங்கத் தலைப்பட்டது. தற்போது ஆறாயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மொழி நூல்கள் அமெரிக்கக் காங்கிரசு நூலகத்தில் உள்ளன.

இந்திய நூல்களின் எண்ணிக்கையிலே காங்கிரசு நூலகத்திற்கு அடுத்து நியூயார்க் பொது நூலகத்தைச் சொல்லலாம். இந்த நூலகம் பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய நூல்களைச் சேர்க்கத் தொடங்கிவிட்டது. இரண்டாவது உலகப் போரின்போது அமெரிக்காவிலேயே இந்த நூலகத்தில்தான் அதிகமான இந்தியநூல்கள் இருந்தன. ஆனால் இரண்டாவது போருக்குப்பின் அது அவ்வளவாக இந்திய நூல்களைச் சேர்க்கவில்லை. அதனால் அது இரண்டாவது இடத்தையே தற்போது பெற்றுள்ளது. இந்த நூலகத்திலே பகவத்கீதை, மகாபாரதம், இராமாயணம் போன்ற நூல்களும் சில கையெழுத்துச் சுவடிகளும் உள. கையெழுத்துச் சுவடிகள் 13 முதல் 17 ஆம் நூற்றாண்டுவரை உள.

அமெரிக்காவிலே மற்றெரு நூலகமான ஆம்சன் நூலகமும் இந்திய நூல்களைச் சேர்ப்பதில் ஆர்வங்காட்டி வருகிறது. அது தனிப்பட்ட முறையில் சார்லசர் ஆம்சன் என்பவரால் 40 ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்டது. தொடக்கத்தின்போது இந்த நூலகம் பிரிட்டன் இந்தியப்படை வரலாறு, இந்தியச் சட்டம் ஆகியவைபற்றிய நூல்களிலேயே அக்கறை காட்டியது. பின்னர் இங்கிலாந்து, பிரான்சு, போர்ச்சுக்கீசு ஆகிய நாடுகளின்