உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அரசறிக்கைகள், கையெழுத்துச் சுவடிகள் ஆகியவற்றையும் சேர்க்கத் தொடங்கியது. மேலும் அண்மையில் வெளிவந்த பல இந்திய நாளிதழ்களையும் இந்த நூலகத்தில் நாம் காணலாம். இந்த நூலகம் பின்னர் மின்ன சோடாப் பல்கலைக் கழகத்துக்குத் தென்னுசியா ஆராய்ச்சிக்காக அன்பளிப்பாகத் தரப்பட்டுவிட்டது.

இந்திய நாட்டு நூல்களை ஓரளவுக்கே கொண்டுள்ள மற்ருெரு பல்கலைக் கழகம் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகமாகும். இந்தப் பல்கலைக் கழகத்திலே டாக்டர் நார்மன்சாரெளண் என்பவர் தலைமையில் தென்னாசியா பற்றிய ஆராய்ச்சி நிகழ்ந்து வருகிறது. இவருக்குச் சென்னைப் பல்கலைக் கழகம் தனது நூற்றாண்டு விழாவின்போது சிறப்புப் பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தியது. பென்சில்வேனியாப் பல்கலைக் கழகம் 1948 ல் இருந்துதான் இந்திய நூல்களைச் சேர்க்கத் தொடங்கியது. அதிலிருந்து, 4,000 ஆங்கில நூல்களையும், 600 க்கு மேற்பட்ட நாட்டுமொழி நூல்களையும், சில நாளிதழ்களையும், மலர்களையும் இன்றுவரை சேர்த்து வருகிறது.

1950 ஆம் ஆண்டுக்குப்பின் பல அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் தென்னசியாபற்றி அக்கறை கொள்ளத் தலைப்பட்டன. அவற்றிலே கலிபோர்னியாப் பல்கலைக் கழகம், கார்னெல் பல்கலைக்கழகம், சிகாக்கோப் பல்கலைக் கழகம், மாகில் பல்கலைக் கழகம் என்பவை குறிப்பிடத்தக்கவை. இந்தப் பல்கலைக் கழக நூலகமெலாம் தற்கால ஐரோப்பிய நூல்களைச் சேர்ப்பதில் மிகுந்த கவனம் கொண்டுள்ளன. இந்திய நாட்டிலே வளரும் முகமதிய மதம் பற்றிய சிறந்த நூல்களை நாம் மாகில், பிரின்ச்டன் பல்கலைக் கழகங்கள் ஆர்ட்போர்டு மன்றம் ஆகிய மூன்றிலும் நாம் காணலாம். நியூயார்க்கிலுள்ள